பக்கம்:ஒரே உரிமை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

வேலைக்காரி விசாலம்

மனைவியைக் கூப்பிட்டுக் கொண்டே ஆயாசத்துடன் ஹாலிலேயே உட்கார்ந்து விட்டார்.

'என்னமோ, ஏதோ' என்ற பீதியுடன் அவர் மனைவி மனோன்மணி ஓடோடியும் வந்தாள்.

அவளைப் பார்த்ததும், சுகாசனத்தில் நிமிர்ந்த படி உட்கார்ந்திருந்த ராமேஸ்வரன், "வந்துட்டாண்டீ!" என்று சொல்லிக் கொண்டே பின்னால் 'தொப்' பென்று சாய்ந்தார்.

"யார் 'வந்துட்டாண்டி?'" என்று பதட்டத்துடன் கேட்டாள் மனோன்மணி.

"நம்முடைய கம்பெனிக்கு ஒரு 'அக்கெளண்டெண்ட்' தேவை என்று பத்திரிகையில் விளம்பரம் செய்திருந்தேனோ இல்லையோ, அதற்கு ஒரு 'அப்ளிகேஷன்' வந்தது. ஆசாமியை நேரில் வரச் சொல்லி கடிதம் எழுதச் சொன்னேன்; வந்தான். பார்த்தால் அவனே அந்த ஆசாமி!"

"ஐயோ! 'அவன், இவன்' என்று சொல்லி ஏன் என் பிராணணை வாங்குகிறீர்? ஆசாமி யார் என்று சொல்லித் தொலையுங்களேன்!" என்று தலையில் அடித்துக்கொண்டு கேட்டாள் மனோன்மணி.

"போடி, போ! உனக்குத்தான் எல்லாம் தெரிந்த கதையாச்சே! பர்மாவிலிருந்து எவனுடைய பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு வந்து இங்கே நாம் இவ்வளவு அமர்க்களமாயிருக்கிறோமோ, அந்தப் பணத்துக்குச் சொந்தக்காரன் என்னிடம் 'அக்கெளண்டெண்ட்' வேலை பார்க்க வந்திருக்கிறான்!" என்றார் ராமேஸ்வரன்.

"நான் அப்பொழுதே சொல்லவில்லையா? எங்கேயாவது அவர் இன்னும் உயிரோடு இருந்தாலும் இருப்பார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/142&oldid=1149448" இலிருந்து மீள்விக்கப்பட்டது