பக்கம்:ஒரே உரிமை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேலைக்காரி விசாலம்

141

என்று. நீங்கள்தான் அந்த மனுஷர் செத்தே போயிருப்பார் என்று ஒரேயடியாய்ச் சாதித்தீர்கள்!"

"நான் என்னத்தைக் கண்டேன்? நாம் வரும் போது நம் கண் முன்னாலேயே எத்தனையோ பேர் சாகவில்லையா? அத்தனை பேரில் அவனும் ஒருவனாயிருப்பான் என்று நான் நினைத்தேன். கடைசியில் என்னடா என்றால்..." என்று சொல்லிக் கொண்டே ராமேஸ்வரன் தம் முகவாய்க் கட்டையை அப்படியும் இப்படியுமாகத் தடவி விட்டுக் கொண்டார்.

"கடைசியில் என்னதான் ஆச்சு?"

"என்ன ஆவது? குற்றத்தை ஒப்புக் கொண்டேன். 'எல்லாம் உம்முடைய பணத்தான், சந்தர்ப்பம் உம்மிடம் பணத்தை ஒப்புவிக்க முடியாமல் செய்துவிட்டது. இப்பொழுது இந்தக் கம்பெனியை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். நான் பழையபடி உங்களிடம் 'அக்கெளண்டெண்ட்' டாகவே இருந்து உத்தியோகம் பார்க்கிறேன்' என்று சொல்லி விட்டேன். அவரும் என்னுடைய பெருந்தன்மையை மெச்சி என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார்"

"நல்ல மனுஷர், பாவம்!"

"நல்ல மனுஷராவது, நல்ல மனுஷர்! இப்பொழுது வந்து நம் குடியைக் கெடுத்தானே, அதைச் சொல்லு!"

"போகட்டும்; அந்த மட்டுமாவது விட்டாரே!—கடவுள் கிருபையிருந்தால் நாளைக்கே கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து விடுகிறோம்!"

"கடவுள் கிருபையுமாச்சு, கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவதுமாச்சு! இந்த ஜன்மத்தில் அதெல்லாம் நடக்கிற காரியமா?—என்னமோ ஜப்பான்காரன் நமக்காகப் பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/143&oldid=1149449" இலிருந்து மீள்விக்கப்பட்டது