பக்கம்:ஒரே உரிமை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிளி பேசுகிறது!

149


வேடிக்கையைக் கேளுங்கள் : அதே பங்களாவில் என்னைப் போல் ஒரு நாயும் வளர்ந்து வந்தது. அதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரே எரிச்சலாயிருக்கும். அதன் அடிமை வாழ்வில்தான் அதற்கு எவ்வளவு திருப்தி:

"நன்றியுள்ள பிராணி" என்று பெயரெடுக்க வேண்டுமாம், பெயர்! அதற்காக அது தன்னை யார் என்ன சொன்னலும் பொருட்படுத்துவதில்லை. "சீ, நாயே!" என்று எத்தனை முறைதான் விரட்டியடிக்கட்டுமே—இல்லை, செருப்பால்தான் அடித்துத் துரத்தட்டுமே—ஊஹூம், அப்போதும் அது வாலை ஆட்டு ஆட்டு என்று ஆட்டிக் கொண்டு, அவர்களுக்குப் பின்னால் சுற்று சுற்று என்று சுற்றிக் கொண்டு தானிருக்கும். அதற்குச் சுதந்திரமும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம்; எச்சில் சோறும், எலும்பும், 'நன்றியுள்ள பிராணி' என்ற பட்டமும் கிடைத்தால் போதும்!

சீசீ; அதுவும் ஒரு ஜன்மமா!

அதை அவிழ்த்து வெளியே விடுகிற மாதிரி என்னையும் வெளியே விட்டால்......?

அந்த நாயைப் போல் நான் திரும்பியா வருவேன், அடிமையாயிருக்க? "ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்!" என்று ஆகாய வீதியை நோக்கிக் கம்பி நீட்டிவிட மாட்டேனா!

***

ன்றொரு நாள் அந்தச் சிறுமிகள் இருவரும் என்னிடம் வந்து, "ரங்க ரங்க ரங்க ரங்க ரங்கா! அக் கக் கக் கக் கா!" என்று கூச்சலிட்டனர்.

நானும் அப்படியே சொன்னேனோ இல்லையோ, அவர்களுக்கு ஒரே குஷி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/151&oldid=1149457" இலிருந்து மீள்விக்கப்பட்டது