பக்கம்:ஒரே உரிமை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

கைமேல் பலன்

செல்வம் எழுந்து பல்லைத் துலக்கி முகத்தை அலம்பிக் கொண்டாள். குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டு, “நீங்கள் வீட்டிலே தானே இருக்கப் போறிங்க?” என்று கேட்டாள்.

“ரொம்ப நல்லாயிருக்கு! பொம்மனாட்டி வேலைக்குப் போறது; புருசன் வீட்டிலே குந்திக்கிட்டுக் கொட்டாவி விடறதா, என்ன? அந்தப் பாழாய்ப்போன ‘மாட்ச் பாக்டரி’க்காரன் மனசு எப்போ இளகப் போகுதோ, நாங்க எப்போ வேலைக்குப் போகப் போறோமோ? அதுவரை எங்கேயாச்சும் கூலி வேலை, கீலி வேலை இருக்கான்னு பார்க்கவேணுமில்லே?”

“அப்படின்ன போறப்போ தட்டியை இழுத்துச் சாத்தி நல்லாக்கட்டிட்டுப் போறிங்களா?”

“போறேன்.”

“மத்தியானம் நான் அய்யர் வீட்டிலேருந்து சோறு எடுத்துக்கிட்டு வாரதுக்குள்ளே நீங்க இங்கே வந்து இருக்கிறீங்களா?”

“இருக்கிறேன்.”

“சரி, அப்போ நான் போயிட்டு வாரேன்!” என்று சொல்லிவிட்டுச் செல்லம் நடையைக் கட்டினாள்.

சின்னப்பன் வாயில் பல் குச்சியை எடுத்து வைத்துக் கொண்டு கொல்லைப் பக்கம் சென்றான்.

***

ந்த ஊரில் 'எம். எம். மாட்ச் பாக்டரி' என்றால் "மன்னார்குடி மாணிக்கம் தீக்குச்சித் தொழிற் சாலை" என்று எல்லோருக்கும் தெரியும். அந்தத் தொழிற்சாலையில் ஏறக் குறைய இருநூறு பேருக்கு மேல் வேலை செய்து வந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/82&oldid=1149331" இலிருந்து மீள்விக்கப்பட்டது