பக்கம்:ஒரே உரிமை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

கைமேல் பலன்


"ஆமாம்."

"தொலையறது! ஏதோ கிடைச்சவரை திருப்தியடைய வேண்டியதுதானே?" என்றாள் செல்லம்.

"வேறே என்ன செய்யறது? நாம் அம்புட்டுத்தான் கொடுத்து வச்சிருக்கோம்—நான் போய்வாரேன்!" என்று சொல்லிவிட்டுப் போனான் சின்னப்பன்.

அவனை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு, செல்லம் வீட்டுக் காரியங்களில் ஈடுபட்டாள்.

அடுப்பை மூட்டி உலை வைத்துவிட்டு அவள் அரிசியைக் கழுவிக் கொண்டிருந்த சமயத்தில், சின்னப்பன் எதிர் பாராத விதமாகத் தளர் நடை நடந்து வந்து அவளுக்கு எதிரே நின்றான்.

"என்னங்க, என்ன உடம்புக்கு? லீவு கீவு போட்டுட்டு வந்துட்டீங்களா?" என்று கேட்டுக் கொண்டே, அவனைத் தலைநிமிர்ந்து பார்த்தாள் செல்லம்.

அவன் ஒன்றும் சொல்லாமல் விசித்து விசித்து அழுதான்.

செல்லம் திடுக்கிட்டு எழுந்து நின்று, "என்னங்க, என்ன? விசயத்தைச் சொல்லுங்களேன்!" என்று பரபரப்புடன் கேட்டாள்.

அதற்கும் அவன் ஒன்றும் பதில் சொல்லாமல் மீண்டும் விம்மி விம்மி அழுதான்.

"ஐயோ! இதென்ன, பொம்மனாட்டி மாதிரி இப்படித் தேம்பித் தேம்பி அழறீங்களே!—ஏதாச்சும் தப்புத் தண்டா செய்து விடடுப் போலிசிலே கீலிசிலே மாட்டிக்கிட்டீங்களா, என்ன?" என்று கவலையுடன் கேட்டாள் செல்லம்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை, செல்லம்! இனிமேல் நாம் எப்படிப் பிழைக்கப் போறோம்னுதான் எனக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/90&oldid=1149352" இலிருந்து மீள்விக்கப்பட்டது