பக்கம்:ஒரே உரிமை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கருவேப்பிலைக்காரி


ழக்கம்போல் இன்றும் விடியற்காலை ஐந்து மணிக்குப் படுக்கையைவிட்டு எழுந்தேன், மணி பத்தாகும் வரை 'அவ'ருக்கு வேலை செய்வதற்கே பொழுது சரியாயிருந்தது.

மாதம் பிறந்தால் அந்த இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்காரன் அவருக்குத் தொண்ணூற்றைந்து ரூபாய் 'பிச்சைக்காசு' கொடுத்தாலும் கொடுத்து விடுகிறான். அவர் மட்டுமா அவனுக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது? நானும்தான் அவர் மூலம் அவனுக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது!

மணி பத்துக்கு மேல் ஒரு நிமிஷம் ஆகிவிட்டால் போதும், அவர் தவியாய்த் தவித்துக் குதியாய்க்;குதிப்பார்! —அவர் குதிப்பதைப் பார்த்துக்கொண்டு நான் சும்மா இருக்க முடிகிறதா?—கை பிடித்த தோஷம்! நானும் அவருடன் சேர்ந்து குதித்துத்தான் ஆகவேண்டும்.

இதனால் அவருக்கு ஒன்றும் கஷ்டமில்லே—நேரம் கழித்துச் சென்றால் மானேஜர் கோபித்துக் கொள்வாரே என்பதைத் தவிர! எனக்குத்தான் கஷ்டமெல்லாம்.

நான்தான் அவருக்குப் பயந்து தொலைகிறேன்; பாழாய்ப் போன அடுப்பு அவருக்குப் பயந்து தொலைகிறதா என்ன? அது தன்பாட்டுக்கு நிர்விசாரமாக எரிந்துத் தொலைகிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/92&oldid=1149356" இலிருந்து மீள்விக்கப்பட்டது