உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே முத்தம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் சந்:- ஆ!... (சந்தோஷம்) சம : - 119 அதுக்காகத்தான், அம்பாகிட்டே தவம்பண்ணி வரம் கேக்கறேன். சந்:- ஏய் சமயோசிதம்! நீ உயிர் வாங்கற வரத்தைப் பரி சோதிச்சுப் பாக்கிறேன்னு, என்னை சாக அடிச்சுப் பாத்துடாதே! சம:- நான் சாவித்திரி மாதிரி சக்தி அடையற வரைக்கும், இப்படிப் பூசை பண்ணிகிட்டுத்தான் இருப்பேன். . சந்- வேணும்னா நானாவது உன்னை இனிமேல் சாவித் திரின்னு கூப்பிடறேன். இந்தப் பூசையை விட்டுடு! சம:-சரி ஆகட்டும்,நீங்க வயலுக்குப் போங்க, நேரமாவுது. சந்- எங்கே... என்கிட்டே ஒருதரம் கொஞ்சு! கொஞ்சடி! கொஞ்சமாட்டியா? சம- போங்க.. என் பிராணநாதா! உம்! சந்:- ஆருயிரே! ஆலம்பழமே! ஆக! ஆக!! இந்த ஆசை வார்த்தை என்னை இந்திரலோகத்துக்கே இட்டுகிட்டுப்போகுதே! க சம:- உம், போதும்! வயலுக்குப் புறப்படுங்க. [ஏர் கலப்பையை எடுத்துக்கொண்டு புறப்பட்ட வன். திரும்பி கோழியைக் கையில் எடுத்து] சந்:- சமயோசிதம்! இன்னைக்கு கோழிக்கறி சமையல்! தெரியுமா? சீக்கிரம் சமையலை முடிச்சு வயலுக்கு சாப்பாட்டை எடுத்துகிட்டு வா! சம:- பாவம்! ஒரு கோழிதானே மிச்சமிருக்கு! சந்:- இருந்தா என்ன? வேறே வாங்கிக்கலாம். சீக்கிரம் வேலையைப்பாரு! (கோழியிடம்) ஏ கோழியே! இன்னைக்கு நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/121&oldid=1702757" இலிருந்து மீள்விக்கப்பட்டது