உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே முத்தம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 ஒரே முத்தம் சாகப்போகிறாய்! இந்த எளந்தம்பதிகள் வயிற்றுக்குள் போகப் போகிறாய்! என் பிராணநாயகியே! வரட்டுமா? (நிற்கீறான்.அவள் பாஞ்சாலியம்மனிடம் பூசை செய்வதுபோல் பாட ஆரம்பிக்கிறான்) சந்:- (தனக்குள்) ஆஃக! என்ன கற்பு, என்ன கற்பு! பெரிய பெரிய ரிஷிபத்தினியெல்லாம், கற்பு விஷயத்திலே இவ கிட்டே பிச்சை வாங்கணும்! சம:- வ (போகிறான்) அப்பாடா! தொலைஞ்சுது பீடை/இதோட அழகுக்கு நான் இதோட கொஞ்சிகிட்டே இருக்கணுமாம். நல்லவேளை, இந்தப் பாஞ்சாலியம்மனும், இந்தக் குதிரும் இல்லைன்னா... "நம்ப தப்பிக்கவே முடியாது" (என்று சொல்லிக்கொண்டே குதிருக்குள்ளிருந்து புறப்படுகிறான் அதிர்ஷ்டம்) சம:- பாவம்!ராத்திரியெல்லாம் ரொம்பக் கஷ்டமா இருந் திருக்குமே? . அதிர்ஷ்டம்:- இல்லை, இல்லை. குளிர்காலம் பாரு, ரொம்ப அடக்கமாயிருந்தது. ஆமாம், உன் புருஷன் ஊருக்குப் போயி ருக்கான்னே, அர்த்தராத்திரியிலே வந்துட்டானே. வந்தான்? ஏன் சம:- என்னை விட்டுத்தான் அவருக்குப் பிரிஞ்சு இருக்கவே முடியாதே. அதான் உடனே ஒடியாந்துட்டாரு. அதி:- குதிருக்குள்ளே ஒரு பெருச்சாளி, அது என்கிட்டே காதல் பண்ண வந்துட்டுது.. பாரேன். பாதி தலைமயிரைக் கத்தி ரிச்சுகிட்டு போய்ட்டுது! சம:- உங்களாலே எனக்கு எவ்வளவு கஷ்டம் பார்த் தீங்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/122&oldid=1702758" இலிருந்து மீள்விக்கப்பட்டது