உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே முத்தம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஒரே முத்தம் குமரி - கரடு முரடான பாதை! இளவரசே! கவிஞர்கள் காட்டுப் பாதைக்கு ஏதோ உவமானம் சொல்வார்களே! புத்த:- ஆமாம். வாழ்க்கைப் பாதை! குமரி:- அது வைதீகக் கவிஞர் சொல்வது நான் கேட்பது லௌகீகக் கவிஞரின் உவமானம். புத்த:- காட்டுப் பாதைக்கு உவமானம்! உம்.. காதல் வாக் க்கள் பாதையைச் சொல்வார்கள். குமரி:- அதுவும் இவ்வளவு கஷ்டமாக்கும். புத்த:- இதைவிடக் கஷ்டம். 40 குமரி:- உறுதி என்னும் குதிரையில் சென்றால்? புத்த:- உடைப்பெடுத்த காட்டாறுகள், கரை புரண் டோடும். குமரி:- கடமை என்னும் கட்டுமரத்தில் ஏறிக்கொண்டால்? புத்த:- பேதமென்னும் பெருங்காற்று வீசும். குமரி:- பிராணத்தியாகம் செய்யவும் தயாராகிவிட்டால்? புத்த:- காதலில் தோல்வியும், வாழ்வில் நாசமும் வந்து சேரும். குமரி:- அந்தக் காதலர்களின் புகழ், அணையாத ஜோதி யல்லவா? புத்த: காதலர்கள் என்றால் சரி. தனியே ஒரு ஜீவன், காதலுக்காக வாழ்வைக் கருக்கிக் கொள்வது பைத்தியக்காரத் தனம். குமரி:- அந்த ஜீவனைத் தனியே தவிக்கவிடுவது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/78&oldid=1702699" இலிருந்து மீள்விக்கப்பட்டது