உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரே முத்தம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 77 புத்த:- தவிப்பு அவர்களாகத் தேடிக்கொள்வது? அதற்கு யார் பொறுப்பாளி? குமரி: மனதிற்குக் கடிவாளம் போடுவது சாமான்யமில்லை. புத்த மற்றவர் மனதை மாற்ற நினைப்பதும் அப்படித் தான். . குமரி:- காதல், காந்தம் என்கிறார்கள். உள்ளங்களை ஒன் றாக இணைக்கும் கயிறு என்கிறார்கள். எல்லாம் பொய்யா? புத்த: எல்லாம் உண்மை. ஆனால் காதலன் கா காதலியைக் கைவிட்டு வீட்டால், அவளுக்கு இதெல்லாம் பொய்யாகிவிடும். குமரி: அப்படியானால், நீங்கள் காதலியைக் கைவிட மாட்டீர்களே? (சந்தோஷமாய்) புத்த: அதெப்படி முடியும்? கடல் பாலைவனமானாலும், கதிரவன் பனிக்கட்டியானாலும், மாட்டேன். என் காதலியைக் கைவிட குமரி:- (ஆவலாக) அத்தான்! (தழுவச் செல்லல்) புத்த: தூ! விடு என்னை. நீ பெண்ணா? அல்லது பிரம்ம ராட்சசி என்பார்களே, அதுவா? காமவெறி தலைக்கேறி ஒரு ஆடவனை வலுவில் அணைக்கும் நீ ஆண்கள் இருக்கும் உலகத் திலே இருக்க அருகதையற்றவள்! நீ குமரி:- மன்னித்துவிடுங்கள். கேவலம், ஒரு விபசாரியைப் பேசுவதுபோலப் பேசாதீர்கள். என் காதல்! பிரம்மராட்சசப் பேயாட்டமல்ல, இதயத் துடிப்பு! அதை எடுத்துச் சொன்னது குற்றமா? அணைபோட்டுத் தடுக்க முடியாத ஆசை வெள்ளம். அதில் தத்தளித்த இந்த அபலையின் மன அலைகள், காதல்!காதல்! என்று ஒலிக்கின்றன. காதலைக் காட்டியதற்கு இல்வளவு கர்ண கடூரமான சொற்களா? இன்பபுரியின் இளவரசரா இப்படிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/79&oldid=1702700" இலிருந்து மீள்விக்கப்பட்டது