இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முதன் முதலாகத் தொடங்கிய ஒலிம்பிக் பந்தயம். கி. மு. 1253-ம் ஆண்டிற்கும் கி, மு, 884-ம் ஆண்டிற்கும்:இடைப் பட்ட காலத்திற்குள்தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஆனால் கி. மு. 776-ம் ஆண்டு நடந்த, பந்தயத்தில் இருந்துதான், வரலாற்று ஆதாரங்கள் காட்டப் பெற்று, அதுவே முறையான முதல் பந்தயம் என்றும். கருதப்படுகிறது.