29 வலிமையான தேகத்தோடு இருந்தால், பெற்ருேர்கள் கையில் கொடுத்து அனுப்புவார்கள். நோய் கொண்டோ அல்லது குறையுடல் கொண்டு பிறந்திருந்தாலோ, அக் குழந்தையை மலைச்சரிவுக்குத் தூக்கிச் சென்று, அங்கே போட்டுவிட்டு வந்து விடுவார்கள். அங்கே அனாதையாக அக் குழந்தை கத்திக்கத்தி மெல்லச் சாகும் குழந்தைக்கு அது கொடுமையான சாவாக இருந்தாலும், கொடுமையான ஆண்மையில்லாத தன் மையுள்ள இளைஞர்களை அநீ நாட்டினர் கனவிலும் விரும்பவில்லை என்பதாலேயே கடுமையாக நடந்து கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு, வாழ்வதற்கு உரிமை பெற்ற பெற்றோருடன் வந்த ஒரு குழந்தை, ஏழு வயது வரைதான். தன் வீட்டிலே, வாழும். அதற்குப் பிறகு, அப் பாலகன் கடுமையும் சோதனையும் நிறைந்த இராணுவ வாழ்க்கை போன்ற அமைப்புக்கு அனுப்பப்படுகிறான். அங்கே, உடல் வலிமை, திறமை, ஆண்மை, செழுமை பெறத்தக்க உடலியற் பயிற்சிகளை அவன் அனுதினம் செய்கிறான்.
ஏழு வயது பாலகனாகப் போனவன், முப்பது வயது வாலிபனாக வெளியே வருகிறான் என்று ஸ்பார்ட்டா நாட்டின் சரித்திரம் கூறுகிறது.
அவர்கள் அனைவரும் சோம்பேறி வாழ்க்கையை வெறுத்தவர்கள். அழகில்லா, ஆண்மையில்லா உடலோடு வாழ்வது பாவம், கேவலம் என்று ஒவ்வொரு இளைஞனும் எண்ணினான். பெற்றோர்களும் அவ்வாறே கருதினார்கள். அதனால்தான், அழகான உடல் கொண்ட போட்டியாளர்களை, வயதைக் கொண்டு பிரிக்க இயலாமல், உடலின் ஆற்றலைக் கொண்டு போட்டிக்காகப் பிரித்தார்கள்.