உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒலிம்பிக் பந்தயத்தின் கதை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


இந்த வீர நிகழ்ச்சிக்குப் பிறகு, பெண்களும் போட்டியிட்டனர். 128வது ஒலிம்பிக்:பந்தயம் ஒன்றில், தேர் ஒட்டப்போட்டியில் கலந்து கொண்ட ஒரு பெண் பெலிச்சி' என்பவள் வெற்றி பெற்றாள் என்றால், பெண்களுக்குரிய, ஆர்வம் எவ்வளவு என்பதுபுரிகிறதல்லவா! அதற்குமுன்னே. பெண்களுக்கும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஹிரா, என்ற இடத்தில் போட்டி நடக்கும் என்றும், 100 கெஜ ஒட்டமே நடந்தது என்றும் ஒரு குறிப்பு கூறுகிறது. தாய்ப்பாசம் தந்த வீரம். பெண்களுக்கு விடிவெள்ளிபோல்,தோன்றி, ஓர் நிரந்தர நன்மையைத் தந்துள்ளதே !