பக்கம்:ஒளிச்சித்திர நயனம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிச்சித்திரநயனம். ளால் கேடுறாவண்ணம் பதனப்படுத்தவேண்டும். இவைகளை வைப்பதற்குத் தகுதியான விடம் இல்லாவிடில் வீட்டிலுள்ள வர்களாலும் சிறு குழந்தைகளாலும் சங்கடம் நேரிடு மானதால் ஏற்றவிடம் வேண்டிய தாவசியகம். இந்த ஒளிச்சித்திர விஷய மாசு உபயோகிக்கவேண்டிய யந்திரம் முதலானவைகள் சிறந்த வஸ்துக்களாகவும் ஜலரூபமான ரசாயனவஸ்துக்களாகவு மிருப் பதால் இதனடியில் சொல்லும் விதமான ஒரு வீட்டைக்கட்டிப் பாதுகாத்துக் கொள்ளுவது உத்தமமாக விருக்கும். இருட்டு அறை. ட இருட்டையுடைய அறையானது தனித்ததாகவும் காற்று தடையற உலாலக் கட்டியக் கதவு சாளரங்கள் உள்ளதாகவும் கந்திகங்கள் சசாயனங்கள் வைக்கத் தகுதியான இடங்க ங்களும் ரசாயனங்களை வைத்து உபயோகிக்கத் தகுமானபீடங்களும் உடையதாக இருக்கவேண்டியது மல்லாமல் முக்கியமான விட த்திலிருக்கும் சாளரத்தில் மஞ்சள்நிறக் கண்ணாடியினாலாவது வஸ்திரத்தினாலாவது அடைப்பிட்டுக் கொள்ள வேண்டும். இதி ன் உட்சுவரில் கருமை அல்லது மங்கல் நிறம் பூசப்பட்டிருக்க வேண்டிய தவசியகம். வெளுமையாயிருக்குமாயின் அங்கியற் றும் தொழிலுக்கு விக்கினமுண்டாகும். இவ்வீட்டில் புகை முதலான அசுத்தங்க எணுகாமலும் மழைக்காலத்தில் ஒழுகல் முதலானவைகள் உண்டாகாக லிருக்கும்படிக் காபந்து செய் துக் கொள்ளவேண்டும். கதவு அடைக்கப்படும்போது வெள்ளை வெளிச்சம் சற்றும் உட்புறத்தில் பிரவேசிக்கலாகாது. தொழி லற்றிருக்கும்போதெல்லாம் சாளரங்கள் திறக்கப்பட்டுக் காற்று லாவச் செய்யவேண்டியது ஆவசியம். ஒரு பக்கத்துச்சுவரில் அலமாரிஎன்று சொல்லும் பல அறைகளுள்ள பெரும் பெட்டி யும் மறுபக்கத்தில் ஒருமரப்பீடமும் மஞ்சள் சாளரத்திற்கு எதி சில் வேறொரு பீடமும் ஒருமூலையில் சுத்தமான தண்ணீர் எக்கா லத்திலும் வைக்க விடமும் இருக்கவேண்டும். அலமாரியில் பல வித திராவகப் புட்டிகளை ஒழுங்காக வைத்து அவைகளில் நாம விலாசம் இடவேண்டும். மற்றெல்லா எந்திரக் கருவிகளையும் ஒழுங்காக வைத்து கையாட வேண்டும்.