பக்கம்:ஒளிபடைத்த கண்ணினாய் வா வா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!

61

 புரியவில்லையே?-நான் புதுக்கோட்டைக்குப் புறப்பட்டுக் கல்லூரியில் சேர்ந்ததும் வீட்டுக்கு எழுதும் என்னுடைய கடிதத்தைப் பிறர் உதவியில்லாமல், தாமாகவே அப்பா படித்தறியும் நல் வாய்ப்பு கிடைத்திட நல்வழி பிறந்துவிட்டால், என் இலட்சியக்கனவு பலித்துவிடும் அல்லவா? இவ்வாறு உரிமையோடும் உறவோடும் எண்ணி மகிழ்ந்த நிலையிலே, மீண்டும் கூட்டத்தைத் துழாவினான் காந்திராமன்.

அங்கே, காந்திராமனின் தந்தை ஆதியப்ப அம்பலத்தைக் காணவில்லை!

பெரியவர்களே! காலம் பொன்னானது! ஆகவே, இந்த முதியோர் கல்வி வளர்ச்சித் திட்டத்தில் சேர்ந்து உண்மையாகவே வாழ்க்கையில் பயனுள்ள வெற்றியைப் பெற விரும்புவோர் தயவு செய்து முன்னே வரவேண்டும் ஊம், வாருங்கள்!

முதியோர் கல்வி மேம்பாட்டுக்கான ஆசிரியர் அழைப்பு விடுத்து வினாடிகள் பல கழிந்ததுதான் மிச்சம்!

முதியோர் கல்வித் திட்டத்தில் சேர அந்தக் கூட்டத்திலிருந்து யாருமே முன் வரவில்லையே?

இளைஞன் காந்திராமன்! பதறினான். கிராமப்புறத்து மக்களின் அறியாமையைப் போக்கி நல்லறிவின் ஒளி வழங்க அரசு பாடுபடும் நல்லெண்