பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிவளர் விளக்கு 11

வேண்டும் என்பதை தோன் காட்ட வேண்டும்; கான் விளம்புமாற்றை நீ விளம்பி யருள வேண்டும்" என்று திருமாளிகைத் தேவர் வேண்டுகிரு.ர்.

ஒளிவளர் விளக்கே! உலப்பிலா ஒன்றே!

உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே! தெளிவளர் பளிங்கின் திரள் மணிக் குன்றே!

சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே!

அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்து உகந் தாயைத்

தொண்டனேன் விளம்புமா விளம்பே.

(அறிவாகிய ஒளி மேன்மேலும் வளர்கின்ற விளக்குப் போன்றவனே! அழிவில்லாத ஒரு தனிப் பரம்பொருளே! உணர்ச்சி வகைகள் குழ்ந்த கிலேயெல்லாம் கடந்த அநுபவப் பொருளே! தெளிவு வளர்கின்ற பளிங்கினுல் ஆன திரண்ட அழகிய குன்றமே! சித்தத்துள் தித்திக்கின்ற ந்ேனே! அன்பு வளர்கின்ற அடியவர் உள் ளத்தில் பழுத்த ஆனந்தக் கனியே தில்லைத் திருச்சிற்றம்பலத்தை கடமிடும் சபையாகக்கொண்டு வெளிப்பட வளரும் தெய்வத் திருக்கூத்தை விரும்பி மேற்கொண்ட கின்னேத் தொண்டனுகிய யான் புகழும் முறையை எனக்குச் சொல்லி யருள வேண்டும்.

விளம்புமா விளம்புமாறு.)