பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனது எளிமை . . 49

சிறிது நேரம் தம் கற்பனைக் கண்ணுல் அந்தச் சோதி லிங்கத்தைக் காண முயன்ருர். அவருக்கு மலைப்புக்குமேல் மலைப்பாக இருந்தது. -

இப்போது வேறு ஒரு வினவு எழுந்தது. அவ்வளவு பெரிய பரமசிவன் நம்மைப் போன்ற சிறிய அறிவும் சிறிய ஆற்றலும் உள்ளவர்களின் உள்ளத்திலே புகுந்து விளங்கு கிருனே! அவன் கருணையை என்னவென்று சொல்வது!" என்று எண்ணினர். பெரியவர்கள் தம் பெருமையை எண்ணுமல் சிறியவர்களுக்கும் எளியராகி வந்து உதவி புரிந்தால் அவர்களுடைய பெருமை ஓங்கும். பிறவற்ருல் உண்டான பெருமைகளையெல்லாம்விட, எளியோருக்கு இரங்கும் எளிமையால் வரும் பெருமை மிகப் பெரிது.

எம்பெருமான் அத்தகைய கருணை படைத்தவன். எளிமையினம் பெரிய பெருமான் அவன். அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேடும்படியாக அங்ங்னம் பெரிய திருவுருவத்தோடு கின்ற அவன், அறிவிலும் ஆற்றலிலும் சிறிய மனிதருடைய உள்ளத்திலே புகுந்து அவர்களுக்கு அருள் செய்கிருனே! அவன் எளிமை எவ்வளவு சிறந்தது! அது அவனுடைய பெருங் கருணையைப் புலப்படுத்துவது அல்லவா? அதனே நாம் எளிதில் மறக்க முடியுமா?

அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட்

அங்ங்னே பெரிய நீ சிறிய என்னே ஆள் விரும்பி என்மனம் புகுந்த

எளிமையை என்றும்தான் மறக்கேன். (பிரமன் அன்னமாகி வானத்தில் பறந்து திருமுடியைத் தேட அவ்வாறு பெரியவகை உள்ள நீ எல்லாவற்றிலும் சிறிய அடியேனே ஆளாக விரும்பி என் மனத்தில் புகுந்த எளிய கருணேயை என்றும் கான் மறக்கமாட்டேன்.

விசும்பு . வானம். அயன் - பிரமன். மறக்கேன் - மறவேன்.)