பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ஒளிவளர் விளக்கு

சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்கோர் வித்துமாய் ஆரூர் ஆதியாய் விதி

விடங்கராய் நடம்குலா வினரே. (தனி முழு முதல் ஒப்பற்ற பரிபூரணமான முதற் பொருள். அதற்கு - அவ்வுலகத்துக்கு. வீதியிலே எழுந்தருளி மனு ரீதிச் சோழனுக்கு அருள் செய்தமையால் வீதி விடங்கர் என்ற திரு நாமம் பெற்ருர். விடங்கர் உளி படாத சுயம்பு மூர்த்தி. கடம் . கடனம்.)

வீதியில் வந்து கூத்தாடுகிறவர்களைப் பிச்சைக்காரர் என்றும் ஏழை என்றும் இழித்துப் பேசுவது உலக இயல்பு. இந்தப் பெருமான் திருவீதியில் வந்து ஆடுகிரு ரென்பதல்ை இவருக்கு ஏதாவது இழிவு உண்டா? இவர் திருவுருவத்தைப் பார்த்தால் எத்தனே அழகாக இருக் கிறது ! கண்ணுலே காண்பது மட்டுமன்று: கருத்தாலே சிறிது சிந்தித்துப் பார்த்தால் இவர் எத்தகையவர் என் பதை உணரலாம். சத்தி முதல் வீதி விடங்கர் வரையு மாக கிற்கும் பரம்பொருள் அல்லவா இவர்? இவர் இங்கே வந்து கடம் குலாவுவதற்குக் காரணம் இவருடைய கருணை.

இதை உய்த்துணர வைக்கிறது பாட்டு. பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்

பருகுதோறு அமுதம்ஒத்து அவர்க்கே தித்தியா இருக்கும், தேவர்காள்! இவர்தம்

திருவுரு இருந்தவா காணிர்; சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்குஓர் வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி

விடங்கராய் நடம்குலா வினரே. பூந்துருத்தி கம்பி காட நம்பி திருவாரூரைப் பற்றிப் பாடிய பாடல்கள் இரண்டு. அவற்றில் இது இரண்டாவது.