பக்கம்:ஒளிவளர் விளக்கு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 ஒளிவளர் விளக்கு

தென் திருவாங்கூர்ப் பகுதிக்கு வேணுடு என்று பழங் காலத்தில் ஒரு பெயர் வழங்கியது. அங்கே வாழ்ந்த அரசர் ஒருவர் பெரிய சிவபக்தராக விளங்கினர். ராஜரிஷியைப் போல வாழ்ந்த அவருக்கு வேணுட்டடிகள் என்ற பெயர் வழங்கியது. அவருக்குச் சொந்தமான பெயரை யாரும் வழங்காமையால் அது மறைந்துவிட்டது.

அவர் எப்போதும் இறைவனே எண்ணுவதும் அவன் புகழைப் பேசுவதும் அவனைத் தொழுவதுமாகவே இருக் தார். ஒரு கணமாவது இறைவனுடைய கினேவு இல்லா மல் இருப்பதில்லை. அவரிடம் இருந்த அன்பு அவ்வளவு உரமுடையதாக இருந்தது. இறைவனே எண்ணி எண்ணிக் கைகுவித்துத் தொழுதுகொண்டே இருப்பார்.

|கின்று கொண்டிருப்பார்; திடீரென்று இரு கைகளையும் கூப்பித் தலைமேல் வைத்துக்கொள்வார். அவருடைய உள் ளத்தில் இறைவனுடைய காட்சியை அப்போது காண்பார் போலும். எதையாவது கினைத்துக்கொண்டே இருப்பார். அதனிடையே இறைவன் கினேவு வரும். உடனே கை குவிப்பார். எங்கேனும் அமர்ந்துகொண்டு யாருடனவது பேசிக்கொண்டிருப்பார். இடையே கையைக் குவித்துத் தொழுவார். இறைவனுடைய கினேவுதான் காரணம். படுத்துக்கொண்டிருப்பார். அப்போதும் கும்பிடு போடு வார். துயின்று எழும்போதே இறைவனைத் தொழுவார். இப்படி எந்த நிலையில் இருந்தாலும் எம்பெருமானைத் தொழுவது அவருக்கு முதலில் பழக்கமாக இருந்தது; பிறகு வழக்கமாகி விட்டது.

நின்று நினைத்து இருந்துகிடந்து

எழுந்துதொழும் தொழும்பனேன் என்று அவரே தம்மைச் சொல்லிக் கொள்கிரு.ர். கின்று தொழும் தொழும்பர் அவர், கினேந்து தொழும் தொழும்பர்