பக்கம்:ஓங்குக உலகம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3. ஆய்வு நெறி


16. ஊர்ப் பெயர்களின் உருமாற்றம்


மிழ் மரபு தொன்மை வாய்ந்தது. தமிழர்தம் அத்தொன்மை மரபு, வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் விளங்கக் காணலாம். நல்ல பண்பாட்டையும் பிற நல்லியல்புகளையும் அதில் காண முடிகின்றது. தமிழகத்தில் நிலப் பிரிவுகளும்கூட இத்தமிழ் மரபின் பண்பினைக் காட்டிக்கொண்டு நிற்கின்றன. ஆயினும் காலவெள்ளத்திடையில் பல்வேறு வகைப்பட்ட பண்பாடு, நாகரிகம், கலை, வாழ்க்கைமுறை, அரசியல் முதலியன தமிழ் நாட்டில் கடந்த மூவாயிரமாண்டுகளாக வந்து கலந்து நிலைபெற்ற காரணத்தால் இன்று எத்தனையோ மாறுபாடுகளைக் காண்கின்றோம். அவற்றுள் ஊர்ப்பெயர்களின் உருமாற்றமும் ஒன்றாகும்.

தமிழர் தாம் வாழிடங்களைத் தம் பண்போடு ஒட்டியே போற்றினார்கள். மிகப் பழங்காலத்தில் அவ்வவ்விடங்களின் இயற்கை நிலையை ஒட்டியே காரணக் குறியீடுகளின் அடிப்படையிலேயே தத்தம் ஊர்ப்பெயர்களை அமைத்துக்கொண்டனர் தமிழர். பிற்காலத்தார் தம் பெருமையோ-தம் பாராட்டுக்குரியோரின் பெருமையோ விளங்க, அவரவர் பெயர்களாலே எத்தனையோ ஊர்களையும் தெருக்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/111&oldid=1135831" இலிருந்து மீள்விக்கப்பட்டது