பக்கம்:ஓங்குக உலகம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முடிவுகட்டி விடாதீர்கள்

123


மின்னி மின்னி வெளிவிடுபவற்றை ‘மீன்’ என்றும், தமக்கென இயல்பான ஒளியில்லாதனவாய், தாம் உலவும் மண்டலத்திலுள்ள சூரியன் போன்ற பேரொளிப் பிழம்புகளிலிருந்து ஒளி ‘கொள்’வனவாக உள்ள கிரகங்களைக் ‘கோள்’ என்றும் அழைத்த பெருமை தமிழர்களுக்கு உண்டு. ஆம். அவ்வவற்றின் பெயர்களிலிருந்தே அவ்வவற்றின் தன்மைகளை உணரவைக்கும் முறையைத் தான் தொல்காப்பியர் ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று எடுத்துக் காட்டியுள்ளார். இப்படியே வானவெளியில் தொங்கும்-ஞான்று நிற்கும்-ஒன்றையும் பற்றாது தனியாக நிற்கும்-உலகை ‘ஞாலம்’ என்று அழைத்தார்கள். இவ்வாறு பல உண்மைகளை விளக்கலாம். விரிவஞ்சி மேலே செல்லுகிறேன்.

இன்றைய விஞ்ஞானிகள் தம் அழிவுப் பாதையை விட்டு விலகி, ஆக்கப் பாதைக்கே தம்மை முற்றிலும் உரியவர்களாக்கிக் கொண்டு உழைப்பார்களாயின் இன்றும் நம் வாழ்நாட்களிலேயே எத்தனையோ அரிய உண்மைகளை உணர்த்துவார்கள் என்பதில் ஐயமில்லை. என்றாலும் இவர்களோ-இவர்தம் வழிவழியாக வரும் பெரும் ஆராய்ச்சியாளர்களோ எதையும் அறுதியிட்டுக் கூற முடியாது என்பதும் அசைக்கமுடியாத உண்மை. அழிவுப்பணி இன்றி ஆக்கப் பணியில் தலை நின்றால் இன்னும் இரண்டு மூன்று நூற்றாண்டுகள் கழித்து, ஆய்வு விஞ்ஞானிகள் இருபதாம் நூற்றாண்டின் இடைக்கால ஆய்வுகளையெல்லாம் எண்ணி நகையாடும் வகையில் அவர்கள் ஆய்வின் வளர்ச்சி எல்லையற்றுப்



*‘ஞாலுதல்’ என்றால் பற்றுக்கோடற்றுத் தொங்குதல் என்பது பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/126&oldid=1127688" இலிருந்து மீள்விக்கப்பட்டது