பக்கம்:ஓங்குக உலகம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

ஓங்குக உலகம்


தேவைகளைப் பெற, நல்லாற்றில் வாழ்வாங்கு வாழ ஆக்கப் பணிக்கு உதவும் அண்டகோள ஆய்வுகள் தேவை-தேவையே. எனவே அறிவியல் அறிஞர்களை ஆய்ந்து கொண்டே இருங்கள் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். ஆனால் ஆய்ந்துவிட்டோம் எல்லை கண்டுவிட்டோம் என்று தவறாக மட்டும் ‘முடிவுகட்டி விடாதீர்கள்’ என்ற வேண்டுகோளோடு அமைகின்றேன்.

கலைக்கதிர்-1974



18. காகிதம் செய்வதிலும்
அச்சுக் கலையிலும் சீன நாட்டின் பங்கு

ன்றைய நூல் அமைப்புக்கலையில்-வெள்ளைத் தாளில் கருமைகொண்டு அச்சிடும் நூல் அமைப்புக்கலையின் வளர்ச்சியில் சீன நாட்டின் பங்கு மிகப் பெரிதாகும். கிறித்து ஆண்டுத் தொடக்க நாளில் காகிதம் அல்லது தாள் சீனாவில் புதிதாகச் செய்யப்பெற்று அக் காகிதம் தற்கால எல்லைக்கு முன்பே உலக முழுதும் பரவிற்று என்பது அறிந்த ஒன்றேயாம். மர அச்சு முதலாவதாக சீனர்களால் கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டில் செய்யப் பெற்றதோடு, தனி எழுத்தாக வடிக்கப்பெற்ற அச்சுக் கலையையும் ‘குண்டன்பர்க்’ என்பார்தம் காலத்தினும் நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே சைனா பெற்றிருந்தது. ‘இந்திய மை’ என அழைக்கப் பெற்றது. எவ்வாறு என அறிய முடியாத, துடைத்தழிக்க முடியாத, புகைக்கரி மையும் சீன நாகரிகத்தின் தொன்மைக் காலத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று. இத்தகைய பொருள்களின் இணைப்பே பரந்து பரவும் பல பக்க நூல்களின் எண்ணற்ற படிகளை உலகுக்கு வழங்க வாய்ப்பாக அமைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/131&oldid=1135835" இலிருந்து மீள்விக்கப்பட்டது