பக்கம்:ஓங்குக உலகம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காகிதம்.........சீன நாட்டின் பங்கு

131


களாகும். கையினால் நூற்ற மெல்லிய நூலிழைகளைக் கொண்டு ஆடைகள் நெய்யப்பெறுகின்றன. காகிதமோ இடித்துக் கூழாக்கிய நாட்டுப் பொருள்களை வேதியல் முறைப்படி கலந்து செய்யப்பெறுவதாகும்.

மரத்தின் அடிப்பட்டை, சணல் நார், கந்தை, மின் வலை இவற்றின் கூட்டுக் கூழால் செய்யப்பெற்ற காகிதம், டிஸ் ஐ லூன் (Ts ai Lun) என்பவரால் கி.பி. 105ல் அரசவையில் காட்டப்பெற்றது எனக் கருதுகின்றனர். தொன்றுதொட்டு எண்ணப்பெறும் இக் கால எல்லை ஏதோ ஒருவகையில் கணக்கிடப்பெற்றுள்ளது, ஏனெனில் அவன் காலத்துக்கு முன்பே செடி, பட்டுத் தாள்களினால் செய்யப்பெற்ற காகிதம் வழக்கத்தில் இருந்தது என்பதை உணர முடிகின்றது. வட சீனாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பெற்ற பழைய காகிதத் துணுக்குகள் வழியே கிறித்துப் பிறப்பதற்கு முன்பே அது கண்டுபிடிக்கப்பெற்றதென அறிய முடிகின்றது. சென்சி மாநிலத்தின் (Shensi Province) பா.ச.கியோ (Pa-ch’ Kiao) என்னுமிடத்தில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன் கட்டப் பெற்ற ஒரு கல்லறையிலிருந்து 1957ல் கண்டெடுக்கப் பெற்ற சில காகிதத் துண்டுகள் அவற்றின் தொன்மைக்குச் சான்றாக உள்ளன. இஃது உண்மையாகக் கொள்ளப்பெறின் ‘டிஸ்.ஐ.லூன்’ என்பார் காலத்துக்குக் குறைந்தது இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே காகிதம் செய்யும் கலையின் தொன்மைநிலையைக் கொள்ளவேண்டியிருக்கும். ஒருவேளை அதுவரை உபயோகப்படாத புதுப் பொருள்களிலிருந்தும், பயன்படுத்தப்பெறாத புதுமுறைகளினாலும் காகிதம் செய்யப்பெற்ற பெருமையை ‘டிஸ்-ஐ-லூன்’ என்பவரைச் சாரலாம். கந்தைகளும் பிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/134&oldid=1127790" இலிருந்து மீள்விக்கப்பட்டது