பக்கம்:ஓங்குக உலகம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காகிதம்...சீனநாட்டின் பங்கு

139


யமையை அறிகிறோம். சீனமொழியின் தனி எழுத்தமைப்பில் சொல்லாக்கப் பெறுகின்றமையின், இம்முறை எளிமையாகவும் சிக்கனமாவும் அமைந்தது. தேவையான எண்ணிக்கை அளவில் தாள்கள் அச்சிட்டதும், அம் மரக்கட்டைகளைப் பத்திரப்படுத்தி வைத்து, மறுபடியும் வேண்டும்போது, தேவையான படிகள் அச்சிடப் பயன்படுத்திக் கொண்டனர். பெருநூல்கள் அதிக அளவிலே அச்சிட நேர்ந்த காலத்திலேயே பிரித்துப்போடும் தனி எழுத்துக்கள் பயன்படுத்தப்பெற்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் தொடங்கி, இந்த மரக்கட்டை அச்சு, பழமையான தனியச்சு இரண்டும் கல்லச்சுக்கலை, வார்ப்பெழுத்து அச்சுக்கலை போன்ற பிற இயந்திர அச்சுக்கலைகளினால் மாற்றம்பெறலாயின.


உலகெங்கும் தாளும் அச்சும் வளர்ந்த வகை

காகிதம் கண்டுபிடிக்கப்பட்டபின், அது சீனாவில் பெரும் புழக்கத்தில் இருந்தது மட்டுமன்றி, உலகெங்கணும் நாற்புறமும் பரவலாயிற்று. கீழ்த்திசை நோக்கிக் கொரியாவிற்கு கி.பி. நான்காம் நூற்றாண்டிலும் ஜப்பானில் ஐந்தாம் நூற்றாண்டிலும் பரவிச் சென்றது. தெற்கு நோக்கி இந்தோ சைனாவிற்கு மூன்றாம் நூற்றாண்டிலும் இந்தியாவிற்கு ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பும் சென்று பரவிற்று. மேற்கு நோக்கி சீனத்துருக்கித்தானத்திற்கு மூன்றாம் நூற்றாண்டிலும் மேற்கு ஆசியாவிற்கு எட்டாம் நூற்றாண்டிலும் ஆப்பிரிக்காவிற்குப் பத்தாம் நூற்றாண்டிலும் ஐரோப்பாவிற்குப் பன்னிரண்டாம் நூற்றாண்டிலும் அமெரிக்காவிற்குப் பதினாறாம் நூற்றாண்டிலும் சென்று பரவிற்று. எட்டாம் நூற்றாண்டில் அரபியர்களால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/142&oldid=1127861" இலிருந்து மீள்விக்கப்பட்டது