பக்கம்:ஓங்குக உலகம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

ஓங்குக உலகம்


நெருப்பில் சுட்டு உருவாக்கினான் என அறிகிறோம். அவ்வெழுத்துக்கள் தேவைக்கேற்ப, ஒரு தகட்டின் மேல் நீரில் கரையாத மரப்பிசின், மெழுகு ஆகியவற்றால் ஒட்டிப் பொறிக்கப்பெறும். பின் அவை சரிசமனாக அமையுமாறு தட்டையான பலகை அவ்வெழுத்துக்களின் மேல் வைத்து அழுத்தப்பெறும். அச்சுப்பணி விரைந்து செயப்பெறுவகையில், பல தகடுகள் பயன்படுத்தப் பெற்றன. பிற்காலத்தில் இத்தகைய (தனியே பிரித்து வைக்கக்கூடிய) எழுத்துக்கள் மேலும் வளர்ச்சியுற்றன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் மரத்தோடு பிற பொருள்களும் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கிப் பதினாறாம் நூற்றாண்டில் வெண்கலமும் பயன்படுத்தப்பெற்றன. மரம், வெண்கலம், வெள்ளீயம், ஈயம், மண் இவற்றாலாகிய அச்செழுத்துக்கள் பின்வந்த நூற்றாண்டுகளில் அடிக்கடியும் இடைவிட்டும் பயன்படுத்தப்பெற்றன.

1340ஆம் ஆண்டிலேயே ஒரு வண்ணத்துக்கு மேற்பட்ட வண்ணங்கள் அச்சிடப்பெற்றமை அறிகிறோம். இக்கலை பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பலகை ஏடுகளையும் மாதிரித்தாள்களையும் பல வண்ணங்களில் அச்சிட்டபோது மேலும் வளர்ச்சியுற்றது. இது, ஒவ்வொரு வண்ணத்திற்கு ஒவ்வொரு தனி அச்சுக்கூட்டினை அமைத்து, ஒன்றன்பின் ஒன்றாகத் தாளில் அச்சிடப்பெற்றதாகும். நூற்படங்கள், நாட்டுப் படங்கள், மாதிரித் தாள்கள், குறியிடு உரையோடு பொருந்திய நூல்கள் அச்சிடுவதற்கெனவே தனித்த வகையில் இம்முறை பயன்பட்டது.

சீன அச்சு வளர்ச்சியில் தனி அச்சு ஒவ்வொரு சமயம் பயன் படுத்தப்பெற்ற போதிலும், தொடர்ந்து காலமெல்லாம் மர அச்சினையே பெரிதும் பயன்படுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/141&oldid=1127858" இலிருந்து மீள்விக்கப்பட்டது