பக்கம்:ஓங்குக உலகம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

ஓங்குக உலகம்


மொழியில் ‘காகளி’ என்ற சொல்லைக் குறித்திருக்கிறார். மிகப் பழங்காலத் தொட்டு, இந்தியாவின் தூய பழ மறைகள் மனப்பாடம் செய்யப்பெற்றும் வாய் மொழியாகப் பரிமாற்றம் பெற்று வந்தமையின், அங்குப் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப்பின் முகமதியர் ஆட்சிக்காலம்வரையில், காகிதம் நன்கு பரவவில்லைபோலும். அச்சுக்கலை இந்தியாவிற்கு இன்னும் காலம் தாழ்த்தே சென்றது.

தாள் செய்யும் தொழிலறிந்த இருவர் கைதிகளாக அரபு நாட்டிற்குக் கொண்டு செல்லப்பெற்ற பிறகு, அவர்கள்வழி கி.பி. 751-ல் சாமல்கண்டில் இக் காகிதம் செய்யும் தொழில் தெரியலாயிற்று. ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்குப்பின் பாக்தாத்துக்குச் சில சீனக் காகித உற்பத்தியாளர் கொண்டுவரப்பெற அவர்கள்வழி இரண்டாவது காகிதத் தொழிற்சாலை பாக்தாத்தில் தொடங்கப்பெற்றது. இக் காலம் முதல் தமாஸ்கஸ் திரிபோலி ஆகிய நகரங்களில் காகிதத் தொழில் தொடங்கப்பெற்றதோடு, ஏமன், எகிப்து, மொராக்கோ ஆகிய நாடுகளிலும் இத் தொழில் பரவலாயிற்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இக் காகிதம் செய்யும் தொழில் ஐரோப்பிய நாடுகளில் பரவுவதற்குமுன் சுமார் ஐந்து நூற்றாண்டுகள் அராபியர் இத் தொழிலைத் தம் முழு உரிமையில் கொண்டிருந்தனர்.

‘இபேரியன்’ (Iberian) தீபகற்பத்தை மூர்ஸ் (Moors) வெற்றிகொண்ட பிறகு அவர்கள் இக்கலையை ஸ்பெயின் நாட்டிற்குக் கொண்டுவந்து, கி. பி. 150 ‘சாடிவா’ (x‘ativa) வில் காகிதத் தொழிற்சாலை அமைத்தனர். அங்கே காகிதத்தை மென்பதமாக்கிக் கூழாக்கும் ஓர் ஆலையும் செயல்பெற்றிருந்தது. மத்தியதரைக் கடல் வழியாக பாலஸ்தீனம் அல்லது எகிப்து நாட்டிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/145&oldid=1127884" இலிருந்து மீள்விக்கப்பட்டது