பக்கம்:ஓங்குக உலகம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முரசுப்பாட்டு

161




21. முரசுப் பாட்டு


ல்ல கவிஞன் நாட்டில் எப்போதோ ஒரு முறை பிறக்கின்றான். அவ்வாறு பிறக்கின்றவன் வையம் உள்ளளவும் வாழவும் செய்கிறான். இந்த மரபு எந்த மொழிக்கும் இயைந்த ஒன்றாகும். அந்த வகையில் தமிழில் பாட்டிசைத்த பாரதி தமிழ்நாட்டில் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கவி பாடி, என்றும் வாழும் கவிஞனாகி நிலைத்துவிட்டான். அவன் காலத்தில் நாடு அடிமைப்பட்டுக் கிடக்க, அதை உரிமை நாடாக்கப் பாரதி பாடிய கவிதைகளே பல; அதனால் விடுதலைக் கவிஞனானான். ஆனால் அவனுடைய பிற கவிதைகளே அவனை என்றும் வாழும் கவிஞனாக்கி விட்டன. அவன் தொடாத துறையில்லை; பாடாத பொருளில்லை. அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் பாடிய பல கருத்துக்கள் இன்று உரிமை நாட்டின் வாழ்விலும் செயலிலும் இடம் பெறுகின்றன. அவன் வாழ்க!

பாரதியின் கவிதைகளைத் தொகுத்தவர்கள் அதைப் பலவகைப்படுத்தினார்கள். அதில் ஒரு பகுதி நீதிப்பகுதி. மக்களின் அவல வாழ்வையும் பிற கேடுகளையும் கண்டு நைந்த உள்ளம் பலப்பல பாடல்களை இசைத்தது. அத்தகைய அவல நிலைக்கான அடிப்படை காரணங்களை ஆராய்ந்த உள்ளம், அம் மனிதன் சிறக்க வாழ வேண்டுமாயின் சில கொடுமைகளை அகற்றி, சில நல்ல நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என உணர்ந்தது. அந்த நெறிகளை விளக்குவதே நீதி-நீதிப்பகுதி. தொகுத்தவர் இந்த நீதிப்பகுதியில் ஆத்திசூடி, பாப்பா பாட்டு, முரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/164&oldid=1135842" இலிருந்து மீள்விக்கப்பட்டது