பக்கம்:ஓங்குக உலகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

ஓங்குக உலகம்


தன்றோ. தன் தாய்மொழி எந்த நிலையில் கெட்டாலும் கவலையுறாது, மேலுள்ளவர்களுக்கு அஞ்சி, தம் வாழ்வை வளமாக்கிக்கொள்ளவேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் வாழ்கின்ற ‘தமிழர்’களுக்குத் தமிழ்நாட்டில் பஞ்சமில்லையல்லவா! இப்படியே நாடு கெடினும் நலமெலாம் சாயினும், தன் வாழ்வினையே மதித்து, மேலுள்ளவருக்கு அஞ்சி வாழும் வன்கணாளர் வாழ்வு நாட்டில் இருப்பதை நாம் அறிவோம். அதனாலேயே தமிழ்நாடு எல்லை அளவிலும், பண்பாட்டு நெறியிலும் பிற நல்லியல்புகளிலும் மெள்ள மெள்ளத் தாழ்ந்துகொண்டே செல்லுகின்றது. நல்லவேளையாக இடையிடையிலே சில அஞ்சா வீரர்கள் தோன்றி தமிழர்தம் மானத்தைக் காக்க ஆவன செய்வதால், ஓரளவு ‘பாழ்பட்டு வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டு’ப் போகாமல் வாழ்ந்துவருகின்றோம்.

தமிழ், தோன்றிய அந்த நாள்தொட்டு இன்றுவரை இத்த்கைய அஞ்சா நெஞ்சம் கொண்ட அறவோர் துணையாலேயே வாழ்ந்து வருகின்றது. இவ்வுண்மையை வரலாறு நன்கு விளக்குவதை யாவரும் அறிவர். நாவரசர் அன்று அஞ்சாது நிற்காதிருந்திருப்பராயின் பல்லவர்வழி அவர்தம் பிராகிருதமும் சமஸ்கிருதமும் நாட்டையும் மொழியையும் மாற்றியிருக்கும். இன்றைய நம் அண்டை நாட்டு மொழிகளாகிய மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்று தமிழும் தன் உரிமை கெட்டு வேற்று மொழி இன்றேல் வாழ்வில்லை என வழக்கிழந்திருக்கும். இப்படியே பலகால எல்லைகளினின்றும் காரணங் காட்டலாம்.

இவ்வாறு நம் முன்னோர் காத்த நல்ல தமிழ் மொழியையும் பண்பாட்டையும் இனியும் வரும் எல்லையற்ற தொல்லைகளைப் போக்கிக் காக்கவேண்டிய பெரும்பணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/27&oldid=1127547" இலிருந்து மீள்விக்கப்பட்டது