பக்கம்:ஓங்குக உலகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேண்டுவது அஞ்சாமை

25


இன்று வாழும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் வருங்காலச் சமுதாயத்துக்கும் உண்டு. இதை உணர்ந்து எல்லா வேறுபாடுகளையும் மறந்து தமிழால் ஒன்றுபட்டு தமிழ் வாழ, தமிழினம் வாழ, தமிழ்ப் பண்பாடு வாழ அஞ்ச வேண்டாததற்கெல்லாம் அஞ்சாது எல்லாவற்றையும் வென்று உற்ற புகழை நிலைநாட்ட முற்பட வேண்டும். இயல்பாக எல்லா நலன்களும் நிரம்பப்பெற்ற நம் தமிழ் மொழி அஞ்சா நல்லாண்மையாளரால் வருங்காலத்தில் உலகில் சிறக்கும் என்பது உறுதி. அதற்கு வேண்டுவது உளஉரமே! வேண்டுவது அஞ்சாமையே! அதுவே தமிழ்ச் சமுதாயத்தை வாழ வைப்பது! வளர வைப்பது!

—1962 மங்கலங்கிழார் மலர்



5. விழாக்கள்


விழாக்கள் மிகப் பழங்காலந்தொட்டே உலகின் எல்லாப் பாகங்களிலும் கொண்டாடப் பெற்று வருகின்றன. நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் பல்வேறு வகையில் விழாக்கள் மாறுபடும். தனி மனிதனைப் பற்றிய விழாக்கள், சமுதாய விழாக்கள், சமய விழாக்கள் நாட்டு விழாக்கள் என விழாவினைப் பலவகையில் பிரிக்கலாம். மேலும் நாகரிகமடையாத அன்றைய மக்கள் தொடங்கி (இன்று வாழும் நாகரிகமற்ற ஒதுக்கிடங்களில் வாழுபவர் உட்பட) நாகரிகம் பெற்றவர் எனத் தம்மைக் கூறிக்கொள்ளும் இன்றைய மக்கள்வரை அவரவர் இனம், குழு, கொள்கை, வாழிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பலவகையில் விழாக்கள் உள்ளன...

ஓ.—2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/28&oldid=1135769" இலிருந்து மீள்விக்கப்பட்டது