பக்கம்:ஓங்குக உலகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மஞ்சள்

35


சடங்கினைத் தொடங்குவர். மஞ்சள் கடவுளாக-பிள்ளையாராக அமைய அதற்கே முதற்பூசை செய்வர். வெற்றிலைப்பாக்குடன் மஞ்சள் தருவதையே மங்கலமாகக் கொள்வர். சிறப்பு நாட்களில் மஞ்சளை வாயில்தொறும் பூசி, குங்குமப் பொட்டிட்டு மாவிலை வேப்பிலை கட்டிச் சிறப்புச் செய்வர். இம் மஞ்சளை அரைத்துத்தேய்த்து அதைத் தம் உடம்பில் பூசி முழுகுவர். இவை யாவும் கப்பு மஞ்சளேயாகும். இனி, கறிமஞ்சள் அதன் உபயோகத்தைத் தன் பெயரிலேயே காட்டிவிடுகிறது. ஆம்! உணவுக்கென அமையும் கறிகளில் இம் மஞ்சளைக் கலப்பர். அது குடலிலும் பிற உறுப்புகளிலும் உள்ள பூச்சிகளை அகற்றி உடல் நலம் கெடாவகையில் மக்களைக் காப்பாற்றுகிறது. எனவே கப்பு மஞ்சளும், கறி மஞ்சளும் மக்களின் புறத்தையும் அகத்தையும் தூய்மைப்படுத்திப் புற அழகினையும் அகத் தெளிவினையும் தந்து அவர்களை நெடிது வாழவைக்க உதவுகின்றன.

மஞ்சளிலிருந்து எடுப்பதே குங்குமம். இதுவும் மகளிரின் மங்கலப் பொருளாகும். கணவனை இழந்தவர் ‘மஞ்சள் குங்குமம் போயிற்றே’ என்று கலங்கி அழுவதை நாட்டில் பலர் அறிவர். எனவே இந்த இரண்டும்-தமிழ்நாட்டு மகளிர் வாழ்வின் ஒளிவிளக்கங்களன்றோ!

இன்று குங்குமம் என்ற பெயரில் எதை எதையோ விற்கின்றனர். வெறும் கோதுமை மாவு போன்றவற்றில் பல வண்ணங்களைக் கலந்து ‘குங்குமம்’ எனப் பெயரிட்டு, பல நிறங்களில் விற்கின்றனர் அப்படியே எதை எதையோ சாந்து என விற்கின்றனர். அவற்றின் நலக்கேடு அறியாதவர்-அவற்றின் வண்ணத்தில் தம்மைப் பறிகொடுத்த நாகரிகம் தோய்ந்த பெண்கள் அவற்றை நெற்றியில் பொட்டாக இட்டு, புண் வரப்பெற்றுப் புலம்புவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/38&oldid=1127301" இலிருந்து மீள்விக்கப்பட்டது