பக்கம்:ஓங்குக உலகம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க பச்சையப்பர்

83


யிலெல்லாம் ஓங்க உதவிய-உதவும் எல்லா அன்பர்களுக்கும் எங்கள் வணக்கமும் நன்றியும் உரியனவாகும்:

இக் கல்லூரிகளிலும் பிற கல்விக்கூடங்களிலும் பயிலும் மாணவர்களுள் பலர் ஏழை மக்களே. ஏழையாகப் பிறந்து, ஏழ்மையை உணர்ந்த பச்சையப்பர்தம் அறநிலையம் அந்த ஏழை மக்களை ஏற்று எல்லாத் துறைகளிலும் அவர்கள் முன்னேறப் பாடுபடுகின்றது. பச்சையப்பர் ஏழை மாணவன் ஒருவனை அணைந்து நிற்கும் காட்சியே-பச்சையப்பர் கல்லூரியின் முகப்பில் உள்ள காட்சியே-எங்கள் வாழ்வின் இலட்சியக் காட்சி. இந்தக் குறிக்கோள் அடிப்படையில் எங்கள் அறக்கோயில் அமைகின்றது.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

என்பது வள்ளுவர் வாய்மொழி. எனவே கல்விப் பயன் கடவுள் உணர்வு பெறுதலேயாம். பச்சையப்பர் அறநிலையத்தின் பெரும்பணி அத் துறையிலேயே நடைபெறுகின்றது. குமரி தொட்டு இமயம் வரையில் உள்ள பெருங் கோயில்களிலெல்லாம் பச்சையப்பர் அறக்கட்டளை உண்டு. சிதம்பரத்தில் ஆண்டுக்கு இருமுறை நடக்கும் தேர்த்திருவிழா பச்சையப்பரைச் சார்ந்ததே. ஆக, கல்வி, சமயம் இரண்டின் அடிப்படையிலே சமுதாய வாழ்வைச் செம்மை நெறிக்கு ஈர்த்துச் செல்லும் பெருவழிகாட்டியாக எங்கள் அறநிலையம் இயங்குகிறது.

தமிழ்நாட்டிலே பல நிறுவனங்களை அமைத்து, ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேலாக அவற்றைப் போற்றிப் பாதுகாத்து, மக்கள் வாழ்வுக் கண்ணாகிய கல்வியையும் அதன்வழி வளத்தையும் அளித்து வரும் எங்கள் அறநிலையம் இன்னும் பலப்பல ஆக்கப்பணி செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/86&oldid=1135811" இலிருந்து மீள்விக்கப்பட்டது