பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


சிறுவன் அறிந்ததுண்டு-கும்பிடு கொடுத்துத் தான் கும்பிடு வாங்கவேண்டும் என்பது!-ஆகவே, கும்பிட்டான். ஆனால், பாவம், அவன் பதிலுக்குக் கும்பிடு வாங்கவில்லை. நேற்று பார்த்த அந்த ஆள் எங்கே?’ என்று மனம் மறுகினான். இவர் இப்படி அழுத்தமாக இருக்கிறாரே? ...

ம் ... வாஸ்தவந்தான். நானோ வேலைக்கு வந்தவன். இவரோ முதலாளி. “பெரிய முதலாளி... பெரிய உடம்புள்ளவர் பெரியவர் இல்லையா, பின்னே ? ... அவரும் எனக்குச் சமதையாய் கும்பிட்டுவிட்டால், அப்பால், கும்பிடு என்கிறதற்கு அர்த்தம் இருக்காதே! ... வேடிக்கையான சிந்தனைகளை வினயமாகப் பின்னினான் அவன்.

கல்லா மனிதரை ஒரு முறை உன்னிப்பாக நோக்கினான் உமைபாலன். இரட்டை நாடியான உருவம். யானைக்குட்டியை-அதுவும் அவன் ட்ராயிங் வரைந்த யானைக்குட்டியை அதே சமயத்தில் எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. திருநீற்றுப்பட்டைகளின் நடுவே சந்தனப் பொட்டு திகழ்ந்தது. உச்சியில் நாலந்து மயிரிழைகள். விசிறிக் காற்றில் அவை பறந்தன.

“ தம்பி, எங்கேருந்து வந்தே ? ’’ “ வடக்கே யிருந்துங்க ! - “ அடடே, வடக்கேயிருந்தா ? ...” “ ம்” “ சீனக்காரன் எப்படி இருக்கான்?” “அவன்தான் நம்ப மூஞ்சியிலே கரியைப்பூச நெனைச்சு, இப்ப தம் மூஞ்சியிலேயே கரியைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/14&oldid=991346" இலிருந்து மீள்விக்கப்பட்டது