பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அப்படிப்பட்ட பையன் வந்தால் தெரிவிப்பதாகக் கூறி, காரைக்கால் புள்ளியின் முகவரியையும் கேட்டார். அதற்கு, அவர் தமது விலாசம் எழுதி பதினேந்து பைசா தபால் தலை ஒட்டப்பட்ட வெள்ளைக்கூடு ஒன்றையும் கொடுத்தார். “இருங்கோ... ஒரு கப் டிக்ரி காப்பி சாப்பிட்டுப் போங்கோ... தஞ்சாவூர் ஸ்பெஷல் இது!... உங்க ஊரிலே காப்பி நல்லதாக் கிடைக்காதில்லே!”.... என்று கூறி, உமைபாலன் - ஜெயராஜ் இருவரது பெயர்களையும் அழைத்தார்.

இருவருமே வரவில்லை.

மேஜையைச் சுத்தம் பண்ண அப்துல்லாதான் வந்தான்.

“காப்பி எனக்கு ஒத்துக்காதுங்க!” என்று தீர்ப்பளித்தார் காரைக்கால் செங்காளியப்பன்.

'போச்சு, இருபத்தஞ்சு காசு என்ற ஏமாற்றத்தில், வந்தவரை வழியனுப்பக்கூட ஒப்பாமல், வியாபாரத்தில் கவனம் செலுத்தலானார் ஐயர்.

சாப்பாட்டு டிக்கெட்டுகள் கேட்டு, ஆட்கள் வந்தனர்.

ஐயர் தம் உடம்பை வெகு சிரமத்துடன் சுமந்துகொண்டு நடந்து உள்ளே சென்றார். “அம்பி கோபுவுக்கு உடம்பு நன்னா இல்லாதாலே இத்தனை கஷ்டம். ... ஈஸ்வரப் பிரபோ!" என்று வாய்விட்டு அலுத்துக்கொள்ள வேண்டியவர் ஆனார்.

டிக்கட்டுகள் வியாபாரம் ஆயின.

உள்ளே முதற்பந்தி ஆரம்பமாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/33&oldid=1163121" இலிருந்து மீள்விக்கப்பட்டது