பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

யில் விற்கப்பட்ட டிக்கட்டுகளிலே இரண்டின் எண்கள் அடுத்தடுத்து விடுபட்டிருப்பதைக் கண்டார். உடனே அவருக்கு ஜெயராஜின் ஞாபகம் வந்தது. ‘நாலு டிக்கட்டுக்கு மாத்திரமே பணம் தந்தான். இரண்டைச் சாப்பிட்டுவிட்டான் பயல் !’ என்று சிந்தித்தபடி, அந்தப் பையனுக்கு ஆள் அனுப்பினர். லீவு எடுத்துச் சென்றவன் இன்னமும் மீளவில்லை என்று தாக்கல் சொல்லப்பட்டது.

அப்போது, ஜெயராஜைத் தேடி, அவனது கழுத்தில் தொங்கிய சிலுவைச் சின்னத்தை அடையாளம் கூறி, யாரோ ஒருவர் வந்தார். தான் யாரென்று சொல்லாமல், அவர் வேகமாகத் திரும்பி விட்டார், சைக்கிளிலே!

ஒன்பதரை மணி.

காரைக்கால் செங்காளியப்பன் கையில் ஒரு துணி முடிச்சுடன் உள்ளே பிரவேசம் செய்தார். பெரிய ‘செவர்லே’ கார் வாசலில் நின்றது. வந்தவர் குந்தினர். பட்டு ஜிப்பா பளபளத்தது.

“பையனை எவ்வளவோ கேட்டுப் பார்த்துட்டேன்னா!... ஒன்றும் பலிக்கல்லே! ஒம்மைத் தெரியவே தெரியாதுன்னு சாதிக்கறான்!” என்று விளக்கினர் பெரியவர்.

“அப்படியா?...” அதற்கு மேல் காரைக்கால் நபர் பேச முடியவில்லை. விழிகள் சிவப்பு ஏறின. பிறகு பேசலானர்: “என்னேட மானத்தைப் பறிக்கிற அளவுக்கு அவன் - என் மகன் பொய் பேசறான் ஸார்!... பெற்ற தகப்பன் ஐயா நான்!... எனக்கு இவன் முதல் தாரத்துப் பையன். இவனோட தாய் காலராவிலே இறந்ததாலே, நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/42&oldid=1282397" இலிருந்து மீள்விக்கப்பட்டது