பக்கம்:ஓடி வந்த பையன்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

டும். ஒம்மோட கண்ணீரைப் பகவான் சீக்கிரமே துடைச்சுடுவார். அவரோட விளையாட்டு வேலையும் அதுவேதானாக்கும்!

கனபாடி கங்காதரம் பாசத்தின் அற்புதம் அறிந்தவராக, உணர்ந்து, மனம் விட்டுப் பேசினார்.

காரைக்கால் நபர் விடைபெறும் பொழுது, நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து ஐயரிடம் நீட்டினார். "என் உயிர் இங்கேயே தானுங்க இருக்கும் ......." இதை வச்சுக்கங்க!...

ஹோட்டல் உரிமையாளர் ஏற்க ,மறுத்துவிட்டார். “ஒம் பையன் இனி எம் பையனாட்டம்!... பணத்தை நீங்களே வச்சுக்கங்க.... பத்திரம்!... நிம்மதியாய்ப் போயிட்டு வாங்கோ !....” என்று வழியனுப்பி வைத்தார்.

அன்றிரவு எல்லோரும் உறங்கிவிட்டார்கள்.

ஆனால் சிறுவன் உமைபாலன் மட்டும் சிலை போல் உட்கார்ந்திருந்தான். சுவாமி விவேகானந்தர், மஹாத்மா காந்தி, நேருஜி போன்ற மனித தெய்வங்களின் முன்னே மண்டியிட்டு வணங்கிக் கண்ணீர் சொரிந்துகொண்டிருந்தான்!

தரையிலே விரிந்து கிடந்த பத்திரிகை விளம்பரத்தில் அச்சிடப்பட்டிருந்த சிறுவன் கருணாகரனின் கிறுக்கப்பட்ட முகத்திலே, உமைபாலனின் கண்ணீர்த் துளிகள் சிதறிச் சிந்தின!....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓடி_வந்த_பையன்.pdf/44&oldid=1282400" இலிருந்து மீள்விக்கப்பட்டது