உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

அறிஞர் அண்ணா


(தாக்குகிறான்.)

ஜெ : மோசக்காரா! கொள்ளைக்காரா!

[ஜெகவீரனை, ரத்னம் பிடித்துக்கொள்ள சேகர் பீரோவை ஆராய்கிறான். படம் இல்லை திகைக்கிறான்.]

ர : (மேலும் தாக்கி) எங்கே படம்?

ஜெ : உயிர்போனாலும் சரி, படத்தைக் காட்ட முடியாது.

ர : அவ்வளவு பெரிய தைரியசாலியா நீ.

[வாயில் துணி அடைத்துக் கட்டிவிட்டு, கை விரல்களில் துணி சுற்றி, எண்ணெய் தோய்த்து நெருப்புக்குச்சி கிழித்து]

எத்தனை குடும்பங்களை நாசம் செய்திருப்பே. இந்தக் கைகளாலே கொளுத்தறேன்! அப்ப உண்டாகுது பார் வேதனை. அதைவிட அதிகமான வேதனையை அந்தக் குடும்பமெல்லாம் அனுபவித்ததுன்னு தெரிந்துகொள்.

[ஜெகவீரன் கண்கள் மிரட்சி அடைகின்றன. தீக்குச்சி அணைகிறது. வேறோர் குச்சி கொளுத்திக் கொண்டு]

ர : ஏழைகள் வயது எரியச் செய்தாயே, இப்ப பார், நெருப்புப் பிடிச்சதும், எவ்வளவு எரிச்சலா இருக்குன்னு தெரியும்.

[வேண்டாம்! வேண்டாம்! என்று காட்டுகிறான் ஜெகவீரன்]

ர : தேவரை, சித்திரவதை செய்தவனல்லவா நீ!

[இதற்குள் சேகர் படத்தையும் காமிராவையும் கண்டுபிடித்துவிடுகிறான். ரத்னம், சேகரிடம் சென்று படத்தைப் பார்க்கிறான்.

ஜெகவீரன் பாய்ந்து சென்று ரத்னத்தின் கைத்துப்பாக்கி மேஜைமேல் இருந்ததை எடுத்து, ரத்னத்தை நோக்கிச் சுடுகிறான். ரத்னம், ஐயோ! என்று கூவிக்கொண்டு கீழே விழுகிறான்.

அந்த அலறலைக் கேட்டுப் பயந்த ஜெகவீரன், துப்பாக்கினைக் கீழே நழுவ விடுகிறான். சேகர், அதைப் பாய்ந்து எடுத்துக்கொள்கிறான். ரத்னத்தைப்
பார்த்துவிட்டு, பிறகு துப்பாக்கியைக் காட்டி ஜெமீன்தாரனை மிரட்டுகிறான்.]

சே : கொலை! படுகொலை செய்துவிட்டாய்! பார் உன்னைப்

போலீசிலே! போலீஸ்! போலீஸ்!