ஓர் இரவு
107
[ஜெமீன்தாரன் மேல் ரத்னம் பாய்ந்து தாக்கியபடி]
ர - படம் இல்லையா! இல்லையா! இல்லே!
ஜெ : (திணறி) இருக்கு, தரமுடியாது.
[மேலும் தாக்கி]
ர : தர - தர - முடியாது - முடியாதா - என்னிடமா சொல்கிறே. நான் யார் தெரியுமா? டாக்டரில்லே! தெரியுதா?
[அடிபட்ட ஜெகவீரன் அழுகுரலில்]
இருக்கு! இருக்குது! கொடுக்கறேன்!
[ரத்னம் அடிப்பதை நிறுத்தியதும். சேகரைப் பார்த்து.]
ஜெ : டே! சேகர்! ஒரு கொலைகாரப் பயலோடு வந்து கொள்ளையா அடிக்கறே.
[ரத்னம் ஜெமீன்தாரனைத் தாக்கி]
ர : டாக்டரிடம், என்னடா பேச்சு! உதைக்கிறது நானு; அங்கே பாத்து உறுமறயே என்ன? எடு படத்தை.
[பீரோ அருகே போகிறார். ரத்னம் பீரோவைத் திறக்கிறான்.
ஜெமீன்தாரன் நோட்டுக் கட்டு எடுத்து ரத்னத்திடம் கொடுத்து]
ஜெ : இதோ பார், இரண்டாயிரம் இருக்கு, என்னை விட்டுவிடு. இந்த டாக்டரு உனக்கு என்ன கொடுக்க முடியும். இவனைத் துரத்து.
ர : நிஜமா இரண்டாயிரம் இருக்கா?
ஜெ : சத்தியமா! இன்னம் வேணுமானா, நாளைக்கு பாங்கியிலே வாங்கித் தருகிறேன். இந்த டாக்டர் உனக்கு இதற்கு மேலேயா பணம் கொடுப்பான்?
[ரத்னம் நோட்டுக் கட்டைப் பத்திரப்படுத்திக் கொள்கிறான்.]
ஜெ : (வெற்றிச் சிரிப்புடன்) டே! சேகர்! பணம் கொடுத்தா, ஆள் அழைச்சிக்கிட்டு வந்தே, என்னைக் கொள்ளை அடிக்க. உன்னாலே எவ்வளவுன்னு செலவு செய்ய முடியும். பார்த்தாயா இப்போ?
[ரத்னம் பணத்தைப் பத்திரப்படுத்தியானதும்.]
ர : (ஜெமீன்தாரனைப் பார்த்து) எடுடா! படத்தை எடு!
ஜெ : (திகிலடைந்து) பணம் கொடுத்தேனே!
ர : அதைத்தான் வாங்கிக்கொண்டேனே! பணம் நீயாக் கொடுத்தது. படம், நான் கேட்கறது இல்ல. எடு, படம்.