உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓர் இரவு

93


காட்சி - 37

இடம் :- பாதை
இருப்போர் :- சேகர்.

[ஓடுகிறான். சுசீலா! சுசீலா! என்று அலறிக் கொண்டு.]

காட்சி - 38

இடம் :- தேவர் வீட்டுக் கூடம்.
இருப்போர் :- தேவர்.

[தேவர் கண்ணீர் பொழிந்த வண்ணம் உட்கார்ந்திருக்கிறார். ஓடி வருகிறான் சேகர்]

சே : சுசீலா எங்கே?
தே :

[சுசீலாவைக் கொன்றுவிடுவான் என்று பயந்து, சேகர் காலைப் பிடித்துக்கொண்டு]

சேகர்! சேகர் ! வேண்டாமப்பா! ஆத்திரத்திலே நீ வேறு கொலை செய்துவிடாதே. நான் படுகிற பாட்டைப் பார்.

[தேவரைத் தூக்கி நிறுத்திவிட்டு]

சே : கொலையா? என் கண்மணியையா? சுசீலாவையா? எங்கே சுசீலா! மாசில்லாத மணி அவள்! சுசீலா! சுசீலா!

[என்று கூவிக்கொண்டே மாடிக்குச் செல்கிறான்]


காட்சி - 39

இடம் :- சுசீலாவின் மாடி அறை.
இருப்போர் :- சுசீலா.

[சுசீலா, கட்டிலின் மீது கவிழ்ந்தவண்ணம் கதறிக் கொண்டிருக்கிறாள். மேஜைமீது, விஷக் கோப்பை இருக்கிறது. சேகர் உள்ளே பாய்ந்து, கோப்பையைக்கண்டு, அதை எடுத்துக் கொள்கிறான்.]

சே : (மூச்சுத் திணற) அப்பா! நல்லவேளை!

[சுசீலா, சேகர் வந்ததது கண்டு, அவன் கையிலே கோப்பை இருக்கக் கண்டு]

சு : சேகர்! எனக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறாய் இந்தக் கடைசி உதவியைச் செய்துவிடு. அந்தக் கோப்பையைக் கொடு.

[சேகர். அவள் பேச்சைக் கவனிக்காமல், அறையில் அங்குமிங்கும் தேடி, ஒரு சீசாவைத் தேடி எடுத்து. அதிலே அந்த விஷத்தைக் கொட்டி, சீசாவைப் பத்திரப்படுத்திக் கொண்டு]

சே : சுசீலா கண்ணே! எனக்கு நேரம் இல்லை, விவரம் சொல்ல.