உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓர் இரவு, அண்ணாதுரை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

அறிஞர் அண்ணா


நமது வாழ்வுக்காகப் போரிடப் புறப்படுகிறேன். வெற்றி பெற்றால் விஷத்துக்கு வேலை இல்லை. தோல்வி அடைந்தால், நீ மட்டுமல்ல, இரண்டு கோப்பைகளிலே விஷம், கடைசி முத்தம். இருவரும் இறந்துவிடுவோம்.

(புறப்படுகிறான்.)

க : (திகைப்புடன்) தாங்கள், என்ன சொல்கிறீர்கள்?

சே : காத்துக்கொண்டிரு. மண ஓலை, அல்லது மரண ஓலை, இரண்டிலே ஒன்று விடிவதற்குள். இதோ வருகிறேன்.

[ஓடுகிறான்.]

காட்சி - 40

இடம் :- பாதை.
இருப்போர் :- ரத்னம், சேகர்.

[இருவரும், எதிர் எதிர்ப்புறமிருந்து ஓடி வருகிறார்கள்.]

ர : ஆபத்து இல்லையே!

சே : இல்லை! விஷம் என்னிடம் இருக்கிறது.

ர : தப்பினாள் என் தங்கை. சரி, சேகர், இனி என்ன செய்யவேண்டும், சொல்லு. சுசீலாவின் வாழ்க்கையைக் கெடுக்கத் துணியும் அந்த ஜெகவீரனின் தலையைக் கொண்டு வந்து உன் காலடியில் வைக்கட்டுமா? கொலைக் குற்றத்துக்கு மரண தண்டனை தருவார்களே என்று பயம் கொள்ளாதே. பாம்பு கொல்லப்பட்டது என்று திருப்தி கொள்.

ஒரு குடும்பத்தை இவ்வளவு கொடுமைக்கு ஆளாக்கும் கொடியவனை விட்டு வைக்கக்கூடாது.

என்னைப் பற்றிக் கவலைப்படாதே. நான் எதற்கும் தயார்!

சே : (ரத்னத்தைத் தழுவிக்கொண்டு)

இவ்வளவுவீர புருஷனாக இருக்கிறாய். சமூகக் கொடுமையால் நீ இந்தக் கதிக்கு ஆளாக்கப்பட்டாய்.

ர : அது கிடக்கட்டும் சேகர். நீ என்ன சமூகம் சமூகம் என்று பேசிக்கொண்டிருக்கிறாய். சமூகத்தின் பிரமுகர்கள், ஜெகவீரர்களாகவே இருக்கிறார்கள். நாங்கள் சாக்கடைப் புழுக்கள். ஆனால் அந்தச் சாக்கடை ஏற்பட்டதற்குக் காரணம், கனதனவான்கள் உற்பத்தி செய்யும் காமச்சேறு. அது ஒழிய வீரர்கள் தோன்றவேண்டும். விடிவதற்குள் முடிகிற காரியமா அது. இப்போது நடக்கவேண்டியதைச் சொல்லு.

சே : ஜெகவீரனைக் கண்டு பிடித்து, அவனிடம் ஒரு படம்