பக்கம்:ஓலைக் கிளி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


"நீ பூவைப் பறித்துக்கொண்டு போனதால் இப் பொழுது அவர்கள் பாதாளச் சிறையில் கஷ்டப்படுகிறார்களே-நீயேன் அப்படிச் செய்தாய் ?" என்று விக்கிரமன் கேட்டான்.

"அதுவா-அது ஒரு பெரிய ரகசியம். இங்கே இருந்து பேசக்கூடாது. பேசினால் ஆபத்து வரும். நீ என்னோடு அதோ தெரிகிறதே அந்த மலையின் உச்சியில் உள்ள முருகன் கோயிலுக்கு வந்தால் எல்லாம் உனக்குச் சொல்லுகிறேன்" என்றது கிளி.


விக்கிரமன் உடனே புறப்பட்டான். தாமரைப்பூ அப்படியே மலர்ந்திருந்ததால் காவல்காரர்கள் அவனைச் சிறைப்படுத்தவில்லை. அந்தப் பூவைக் காணோமென்றால் தான் அரசகுமாரனைப்பிடித்துச் சிறைக்குக்கொண்டுபோக வேண்டும் என்பது ராணியின் கட்டளை.

விக்கிரமன் கஷ்டப்பட்டு மலைமீது ஏறினான். கிளி அவனுக்கு வழி காண்பித்துக்கொண்டே முன்னால் மெதுவாகப் பறந்து சென்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓலைக்_கிளி.pdf/21&oldid=1027478" இலிருந்து மீள்விக்கப்பட்டது