பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

3


நமது தமிழின விடுதலைக்கும் எந்த வகையிலே தொடர்பு இருக்கிறது என்பதையெல்லாம் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். இனத்தாக்கம் எப்படி ஏற்படுகிறது; அதற்கு உலக அளவிலே எந்த எந்த அளவிலே முயற்சிகள் எதிர்ப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதையெல்லாம் ஒர் அரசியல் கோணத்தில் எடுத்துக் காட்டினார்கள்

அதேபோல் காலையிலே நடைபெற்ற பாட்டரங்கத்திலே பலவாறான வல்லாண்மைத் தன்மைகளையெல்லாம் தமிழினத்தவர் மேல் எப்படி மாற்றவர்கள் கொண்டு செலுத்துகிறார்கள் என்பதையெல்லாம் பாவலர்கள் தெளிவாகப் பாடினார்கள்.

தமிழின முன்னேற்றத்திற்கு ஏற்பட்டுள்ள தடைகள்!

அதேபோல், அறிஞர்கள் தமிழின நலன்களையும், தமிழ்க் கல்வியின் தேவைகளைப் பற்றியும் நல்லபடியாக விளக்கினார்கள்

இந்த நிலைகளையெல்லாம் வைத்துக்கொண்டு நீங்கள் ஒரு பொதுவான உணர்வுக்கு வந்திருப்பீர்கள், தமிழ்மொழி முன்னேற்றம் அடைவதற்குப் பலவகையான தடைகள் இங்கே இருக்கின்றன. தமிழினம் தன்னை உணர்வதற்குப் பலவகையான எதிர்ப்புகள், தாக்கங்கள் இருக்கின்றன. தமிழ்நாடு உரிமை பெறுவதற்குப் பலவகையான நிலைகளிலே தமிழினப் பகைவர்களாக இன்றைக்கு இருக்கின்ற இனப்பகைவர்கள், அரசியல் பகைவர்கள் எல்லாம் எந்தெந்த வகையிலே தடையாக இருக்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். இந்த உணர்வுகளெல்