பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

ஓ! ஓ! தமிழர்களே!


அவர்களே! பாவேந்தர் பாரதிதாசனாரின் பாட்டரங்கத்தில் கலந்து கொண்ட அறிஞர் பெருமக்களே! மற்றும் இந்த 'உலகத் தமிழின முன்னேற்றக் கழக'த்தின் பெரியார் மாவட்டத்தின் இரண்டாவது மாநாட்டை மிகவும் அரும்பாடுபட்டு, இக்கட்டான இக்காலச் சூழ்நிலையில், உட்பகைக்கும் அஞ்சாது, இம்மாநாட்டைக் கூட்டி மிகவும் எளிமையாகவும், வலிமையாகவும், சிறப்பாகவும் தொண்டு செய்து கொண்டிருக்கின்ற என் அருமை நண்பர் பெருமைக்குரிய நம்முடைய புலவர். அரசமாணிக்கனார் அவர்களே! அவருக்கு மிகவும் தோன்றாத் துணையாக இருந்து உறுதுணையாக நின்று எல்லா நிகழ்ச்சிகளிலும் பல சிறப்பு நிலைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிற மதிப்பிற்குரிய புலவர் வடிவேலனார் அவர்களே! காலையிலிருந்து தொடர்ந்து நிகழ்ச்சிகளைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்து கொண்டிருக்கிற பெரியோர்களே! சான்றோர்களே! அறிஞர் பெருமக்களே! தமிழ் உணர்வுள்ள இளைஞர்களே! தாய்மார்களே! உங்கள் அனைவர்க்கும் என்னுடைய அன்பு கலந்த நன்றியையும் வணக்கத்தையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்

முன்னர் நடந்த நிகழ்ச்சிகள்!

இம்மாநாட்டில் காலையிலிருந்து மாலைவரை பல வகையான கருத்துகள் பேசப்பட்டன. அந்தக் கருத்துகளைப் பற்றி ஒருவாறு உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும். அந்தக் கருத்துகளிலே என் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய பாவலர் அரு.கோபாலன் அவர்கள். உலக அளவிலே இன்றைக்கு (குவைத்தில்) நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு பெரும்போர் என்கின்ற அந்த நிலையை விளக்கிக் காட்டி, அதற்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/12&oldid=1163172" இலிருந்து மீள்விக்கப்பட்டது