பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

5


கருத்துகளைப் பொறுத்த அளவிலே அதைச் செயலுக்குக் கொண்டுவர இயலுமா? அப்படிச் செயலுக்குக் கொண்டு வர என்ன வகை - என்ன வகையிலே அதைச் செயல்படுத்தலாம் என்பதைப் பற்றியெல்லாம் சிந்திப்பவர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். தமிழைப் பற்றிப் பேசினால் தமிழறிஞர் எனப்பாராட்டுப் பெறலாம்: தமிழைப் பற்றிப் பாடல்கள் பாடினால் பாவலர்கள், பாவேந்தர்கள் என்றெல்லாம் சிறப்புப் பெறலாம். பரிசுகள் பெறலாம்; மக்களால் வாழ்த்தப் பெறலாம். அதேபோலத் தமிழின வரலாறுகளை எடுத்துச் சொல்லித் தமிழ் இனநல உணர்வுகளை நாம் மக்களிடத்திலே பரப்ப முயன்றால் அதற்கும் ஒரு வழியிலே சிறப்பு கிடைத்துக் கொண்டுதான் இருக்கும்

என்னைப் பாராட்டுவதும் எனக்கு
வெட்கத்தையே தரும்

மிகவும் வெட்கத்தோடு ஒரு செயலைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்: இம் மாநாட்டில் காலையிலிருந்து மாலை வரை, அறிஞர்கள் பேசிய பேச்சுகளிலே அடிக்கடி என்னுடைய எளிமைத் தொண்டை - ஒரு முயற்சியை இந்தத் தமிழின மக்களுக்குச் செய்யப்படவேண்டிய இன்றியமையாத செயலை - கடமையை அடிக்கடி நினைவூட்டி எதற்கும் பற்றாத என்னொடு பொருத்திச் சொன்ன அந்தச் சொற்கள் எனக்குப் பெரிய நாணத்தையும் வெட்கத்தையும் தந்தன என்று சொன்னால், அது உங்களுக்கு விளங்குமோ விளங்காதோ தெரியவில்லை.

பெரும்பாலும் பாராட்டுவதே நம்
இலக்கியங்களாக இருக்கின்றன

எனவே வருத்தத்தோடு சொல்லிக், கொள்கிறேன்: தமிழினத்திலேதான் - தமிழர்களிடத்திலேதான்