பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

ஓ! ஓ! தமிழர்களே!


ஒருவரை ஒருவர் பாராட்டுகிற உணர்ச்சி அதிகமாக இருக்கிறது. நம்முடைய மதிப்பிற்குரிய சண்முக சுந்தரனார் இங்கே குறிப்பிட்டார்கள்-அறிஞர் பெருமக்களைப் பாராட்டுகிறபொழுது, பாராட்ட வேண்டும் என்று சொன்னார்கள். பாராட்ட வேண்டியதுதான். ஆனால் பாராட்டிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற அந்த உணர்வு எனக்குச் சரியாகப் படவில்லை. நம்முடைய தமிழ் இலக்கிய வரலாற்றிலே, இன வரலாற்றிலே, அரசியல் வரலாற்றிலே நிறைய ஏராளமான அரசியல் கருத்துகளும், அறவியல் கருத்துகளும், அகவியல் கருத்துகளும், புறவியல் கருத்துகளும், இருக்கின்ற அதே தன்மையிலே, ஏராளமான பாராட்டுதல்களையும் பார்க்கலாம். அரசர்களையும், செல்வர்களையும், வள்ளல்களையும், புலவர்கள் தங்களுடைய அறிவுப் புலமையினாலேயே, என்னென்ன கோணங்களிலே அவர்கள் பாராட்டிக் கொண்டிருந்தார்கள் என்பதைத் தமிழ் இலக்கியங்களைப் படிக்கின்றவர்கள் மறந்துவிட முடியாது

திருவள்ளுவர் எவரையும் பாராட்டியதில்லை:
திருவள்ளுவரையும் எவரும் பாராட்டவில்லை

மிக வருத்தத்தோடு ஒரு புதிய செய்தியை நினைவூட்ட விரும்புகிறேன். இதை வேறு யாரும் உங்களுக்குச் சொல்லியிருக்க மாட்டார்கள். நம்முடைய தமிழிலக்கிய வரலாற்றிலே காணப்பெறுகின்ற புலவர்கள் அனைவரும் ஒரு பணியும் செய்யாதவர்கள். எந்த வேலையும் செய்யாதவர்கள். எந்தப் புலவராவது எங்காவது வேலை செய்ததாக எந்தக் குறிப்புமில்லை. திருவள்ளுவர் ஒருவர்தாம் வேலை செய்து பொருளிட்டிக் கூலி பெற்று வாழ்ந்து கொண்டிருந்ததாக நமக்கு வரலாறு கிடைத்திருக்கிறது. அரசமுறை (தர்ம)ப் பணியை அவர் செய்தார். செய்தி அறிவிப்பாளராக அவர் இருந்தார் என்று