பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

7

சொல்லுகிறபோது, அவருடைய நூலைப் பார்க்கிற பொழுது, அவர் அந்தப் பணியைச் செய்து கொண்டு அதனால் வந்த வருவாயைப் பெற்றுப் பிழைத்திருக்கிறாரே தவிர, அவருடைய புலமையை விற்றுப் பிழைக்க வில்லை. எந்த அரசரையாவது திருவள்ளுவர் பாராட்டியிருக்கிறார் என்ற ஒரு பாட்டைக் காட்ட முடியாது. எந்த அரசரும் அவரைப் பாராட்டியதாக ஒரு செய்தியும் காட்டமுடியாது

ஏன் நான் இதைக் குறிப்பிடுகிறேன் என்று சொன்னால் நம்முடைய புலவர்கள் வரலாற்றிலே திருவள்ளுவர் ஒருவர்தான் வேறு கோணங்களிலே கருத்துகளைச் சொன்னவர் என்னென்ன கருத்துகளை என்று சொன்னால், இயல்பான எல்லாப் புலவர்களும் இலக்கியங்களைப் பாடிக் கொண்டிருந்தபொழுது, அகவியல் பாடல்களையும், புறவியல் பாடல்களையும் அரசர்களின் மேல் ஏற்றிச் சொல்லிக் கொண்டிருந்த பொழுது-அவற்றிற்காகப் பரிசுகளையும், பெருமைகளையும், வாழ்வியல் நலன்களையும் பெற்றுக் கொண்டிருந்த பொழுது, இந்தத் தமிழின மக்களுக்காகப் பல வரலாற்று நிகழ்ச்சிகளை அவர்கள் என்றென்றும் நினைவிலே வைத்திருக்கவேண்டும் என்பதற்காக, முற்றிலும் அப்பொழுதிருந்த இலக்கிய வழக்குக்கு மாறுபட்ட நிலையில் ஒரு நூலைச் செய்திருக்கிறார். திருவள்ளுவர்

தமிழ் இனநலத்துக்கான ஒரு நூல் திருக்குறளே!

நன்றாக நீங்கள் எண்ணிப் பாா்க்க வேண்டும். திருக்குறள் ஓர் அறவியல் நூல்: ஒரு வாழ்வியல் நூல்; ஒரு நீதி நூல்: இலக்கிய நூல் என்று நாம் சொல்லு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/17&oldid=1163184" இலிருந்து மீள்விக்கப்பட்டது