உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

ஓ ! ஓ ! தமிழர்களே !

முடியாது எவ்வாறாகிலும் நாம் நம்முடைய உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துவிட்டால் நல்லது. ஒவ்வோர் உரிமையாகப் பெறப்பெற அந்த ஒவ்வொரு நிலையிலும் தனித்து நிற்கிறீர்கள் என்கிற உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்; எந்த நிலையிலும் நாம் தனித்துப் போராடினால் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும்

நாம் தனித்தனியாக இயங்குவதையே அவர்கள் ஊக்குவிக்கிறார்கள்

இப்பொழுது "பாட்டாளி மக்கள் கட்சி"' - என்பது முன்பு வன்னியர் கட்சியாக இருந்தது; அதை மறைமுகமாக ஊக்குவித்தார்கள். அதேபோல தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆறேழு இயக்கங்கள் உண்டு. அவற்றைத் தனித்தனியாகக் கண் முன் தெரியாமல் ஊக்குவிக்கிறார்கள். ஏன் அவ்வாறு ஊக்குவித்து அவர்களுக்குத் தமிழ் இன ஒற்றுமை இன்றி ஆக்குகின்றார்கள்? அவையெல்லாம் வளர்ந்தால்தான் நல்லது. இல்லையேல் தமிழினம் ஒன்றுபட முடியாது

அதேபோல, கட்சிகளில் கூட எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். அ.தி.மு.க. என்றால் எத்தனை அ.தி.மு.க மூன்று, அ.தி.மு.க. என்று மூன்றையும் மறைமுகமாக வளர்க்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்தால் என்ன? குமரிஅனந்தன் போன்றவர்கள் எல்லாம் சிலப்பதிகாரம் என்று கத்திக்கொண்டு இருந்தவர்கள். இன்றைக்கு ஏதாவது ஒரு சில நிலைகளிலே அந்த சாம, பேத, தான, தண்டம் என்கிற தந்திர முறைகளைப் பின்பற்றிப் பணம் கொடுக்கிறார்கள். இல்லையானால், மறைமுகமாக அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிடுகிறார்கள். அச்சுறுத்தி அவர்களை ஒன்றுசேர்க்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/50&oldid=1163327" இலிருந்து மீள்விக்கப்பட்டது