பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

ஓ ! ஓ ! தமிழர்களே !

அங்கே காட்டப்பட்டிருக்கிறது. அனைத்துக் கூறுகளுக்கும் இலக்காக இருக்கிற-வழிகாட்டியாக இருக்கிற ஒரு கலங்கரை விளக்காக நின்று கொண்டிருக்கிற-அந்தத் திருக்குறளை வைத்துக் கொண்டு, அதை மட்டுமே வைத்துக்கொண்டு - நாம் தமிழ் இனத்தை மீட்டுவிட முடியும் என்று கருதிக் கொள்ளக் கூடாது என்று திருவள்ளுவம் சார்ந்த அறிஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

அரசியலால் மட்டுமே இனத்தை மீட்டு விட முடியாது:

அதேபோல, அரசியல் சார்ந்த அறிஞர்களையும் கேட்டுக் கொள்கிறேன் . வெறும் அரசியல் தன்மைகளிலேயே மக்களிடத்திலே அரசியலால், பதவிகளால், அதிகாரத்தால் ஏதாவது ஒரு மறுமலர்ச்சியை, முன்னேற்றத்தைத் தோற்றுவித்து விடமுடியும் - அதுவே போதும் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்

பொருளியல் முயற்சி மட்டுமே போதாது:

அதேபோல, பொருளியல் கற்ற மேதைகளுக்கும் சொல்லிக் கொள்கிறேன். பொருளியலால் மட்டும் இந்த இனத்தை முன்னேற்றிவிட முடியாது. இந்த இனத்தினுடைய தலையாய தேவை அடிமை நீக்கம், அறியாமை நீக்கம், மடமை நீக்கம், மிடிமை நீக்கம், சாதி நீக்கம், மதப்பூசல்கள் நீக்கம், அரசியல் கட்சிப் பூசல்கள் நீக்கம் இணைந்த இத்தனை நீக்கங்களையும் நாம் செய்து, இந்த இனத்தைத் தூய்மையான ஒரு தமிழினமாக மாற்றினால்தான், அதிலே திருக்குறள் இருக்கும்: அறம் இருக்கும்; அரசியல் இருக்கும்: