உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெருஞ்சித்திரனார்

55

ருந்த இனம், மிகச் சிறந்த பண்பாட்டைப் பெற்றிருந்த இனம், மிகச் சிறந்த அறிவியல் கூறுகளைப் பெற்றிருந்த இனம், என்று தமிழினத்தைத் தவிர்த்த வேறு எந்த இனத்தையும் சுட்டிச் சொல்ல முடியாது, வரலாற்றிலே, நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. உலக வரலாறு படித்த அறிஞர்கள் தெரிந்திருப்பீர்கள். பின் ஏன் இந்த இனம் இழிவடைந்து விட்டது? என்ன காரணம்? நமக்குள்ளே இருக்கின்ற பூசல்கள், சாதி வேறுபாடுகள்

"ஆயிரம் உண்டிங்கு சாதி-எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி"

என்னயா இது வேடிக்கை! எப்படி சாதிகள் வந்தன? எப்படி வருண வேறுபாடாக மாறின? எப்படி இழிவு தாழ்வுகள் தோன்றின?

வேற்றுமைப் படுத்துகிற இறையியலும் மதமும் எங்களுக்கு வேண்டாம்:

இன்றைக்கும் சொல்லுகிறாய், "நீ தேவன்” என்று; "நீ உயர்ந்தவன்" என்று இன்றைக்கும் ஒருவனைத் தாழ்ந்தவன் என்று சொல்லுகிறாய்; பிற்பட்டவன் என்கிறாய்; இழிந்தவன் என்கிறாய்; ஒருவனுடைய மொழியிலே இறைவனிடத்திலே பூசை செய்யக்கூடாது, வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்கிறாய். இறைவன் என்று இருந்தால். அவன் எல்லா மொழியையும் தெரிந்திருக்கவேண்டும் என்பதுதானே சரி குறவர்கள் தங்கள் மொழியிலே சொல்லுகிற, வழிபாட்டையும் கூட. இறைவன் ஏற்றுக் கொள்ளவேண்டியதுதானே. அல்லது, உயிரினங்கள் ஆகிய எறும்பு முதல் யானை வரை அவை பேசிய பேச்சுகள், மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்தானே? ஏன் தமிழிலே வழிபடக்கூடாது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/65&oldid=1166115" இலிருந்து மீள்விக்கப்பட்டது