பெருஞ்சித்திரனார்
65
அரசியலைக் கைப்பற்றுதல் அரிது என்று அப்படிப் பாட வேண்டிய இரங்கத்தக்க நிலை, இப்போது!
விழிப்புற்று எழ வேண்டும்!
எனவே, நாம் அந்தப் பழமையிலே ஊறிக்கொண்டு அடிமைத் தனத்திலிருந்து மீளாத தன்மையிலே அடிமையுற்று, மடமையுற்று, மிடிமையுற்று அறியாமையுற்று இருக்கக் கூடாது. விழிப்புற்று எழவேண்டும். அதைத் தான் பாவேந்தர் அவர்கள் நூற்றாண்டு விழாவிலே நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். அந்த முயற்சிகளுக்கு "உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்" ஒருவாறு துணை செய்கிறது. "தமிழின விடுதலைக் கழகம்" ஒருவாறு துணை செய்கிறது. நாங்கள் வைத்திருப்பதெல்லாம் சிறிய சிறிய இயக்கங்கள். 100-பேர், 500 பேர் சேர்ந்த இயக்கங்கள். இலக்கம் பேரைச் சேர்த்துக் கொள்ளுகிற அளவிற்குக் கூட எங்களுக்குப் பொருள் ஏந்துகள் இல்லை. வசதி, வாய்ப்புகள் இல்லை. அது இருந்தால் அ'து எப்படி ஆகுமோ அ'து எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்த அளவு அப்படியெல்லாம் வளர்ந்து, இதையே ஒரு பெரிய அரசியல் கட்சி போல் ஆக்கிவிடக் கூடாது என்பதற்காகவே பெரிய அளவில் அதை வளர விடவில்லை. உண்மை அதுதான். இல்லையானால் நிறைய வளர்ந்திருக்கும்.
இந்த உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதனால்தான் நடுவணரசு. கைவைப்பதற்கு அஞ்சுகிறது. ஜரோப்பாவில், அமெரிக்காவில், ஆசிய நாடுகளிலே. இலங்கையிலே எல்லா