பக்கம்:ஓ மனிதா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆந்தை கேட்கிறது

55

பறவைகளை எச்சரிப்பதற்காக; உங்களைப் பயமுறுத்துவதற்காக அல்லவே அல்ல.

இந்தச் சேவைக்காகத் 'தொண்டன்' என்று சொல்லிக் கொண்டு நான் எந்தத் தலைவனின் வாலையும் பிடித்துக் கொண்டு திரிவது கிடையாது. 'வட்டச் செயலாளர்' என்று சொல்லிக் கொண்டு என் 'உண்டி'க் காகக் கட்சி உண்டி'யைக் குலுக்குவது கிடையாது; எம். எல். ஏ சீட்டுக்கோ எம். பி. சீட்டுக்கோ தவம் செய்வதும் கிடையாது; எப்படியாவது அமைச்சராக வேண்டுமென்ற மனத்தின் நமைச்சலால் கட்சி விட்டுக் கட்சி மாறுவதும் கிடையாது, சுருங்கச் சொன்னால் என் சேவை சேவைக்காகவே வேறு எதற்காகவும் அல்ல.

ஒருவேளை நானும் உன்னைப் போல் மனிதனாய்ப் பிறக்காமற் போனதுதான் இதற்குக் காரணமாயிருக்ருகுமோ என்னவோ, யார் கண்டார்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_மனிதா.pdf/56&oldid=1370800" இலிருந்து மீள்விக்கப்பட்டது